Asianet News TamilAsianet News Tamil

2007 டி20 உலக கோப்பையில் நடந்த வரலாற்று சம்பவம்..! பாகிஸ்தான் மண்ணை கவ்வியது ஏன்..? இதுதான் காரணம்

2007 டி20 உலக கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிரான லீக் சுற்று போட்டியில் போல்டு அவுட் முறையில், இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பந்துவீசி போல்டு அவுட் செய்த நிலையில், பாகிஸ்தான் பவுலர்கள் சொதப்பியதற்கான காரணத்தை இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். 
 

irfan pathan reveals why pakistan bowlers failed in bowled out in 2007 t20 world cup
Author
Chennai, First Published Aug 15, 2020, 7:47 PM IST

தோனி கேப்டனான புதிதில் 2007ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த உலக கோப்பை தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் 2 முறை மோதின. லீக் சுற்றிலும் இறுதி போட்டியிலும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இரண்டிலுமே இந்தியா தான் வெற்றி.

லீக் சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போட்டி டர்பனில் நடந்தது. அந்த போட்டியில் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரு சம்பவம் நடந்தது. அந்த போட்டி டை ஆனதையடுத்து, இப்போது வீசப்படுவதை போல சூப்பர் ஓவர் வீசப்படாமல் வித்தியாசமான முறை கையாளப்பட்டது.

ஒவ்வொரு அணியிலிருந்தும் 5 வீரர்கள் பவுலிங் போட அழைக்கப்பட்டனர். அதில் எந்த அணியின் வீரர்கள் அதிகமாக ஸ்டம்பில் அடித்து போல்டு செய்கிறார்களோ அந்த அணி வெற்றி பெறுவதாக முடிவு செய்யப்பட்டது. அதற்கு இரு அணி கேப்டன்களும் ஒப்புதல் தெரிவித்தனர். 

பாகிஸ்தான் அணி, அவர்களது பிரைம் பவுலர்களை தேர்வு செய்து வீசவைத்தது. பாகிஸ்தான் சார்பில் முதல் மூன்று பந்துகளை வீசிய யாசிர் அராஃபத், உமர் குல் மற்றும் ஷாஹித் அஃப்ரிடி ஆகிய மூவருமே ஸ்டம்பை தாக்க தவறிவிட்டனர். ஆனால் இந்திய அணி சார்பில் வீசிய மூவருமே ஸ்டம்பில் அடித்தனர். இந்திய அணி சார்பில் பந்துவீசிய மூவரில் இருவர் பேட்ஸ்மேன்கள்; பார்ட் டைம் பந்துவீச்சாளர்கள். ஹர்பஜன் சிங் மட்டுமே பிரைம் ஸ்பின்னர். ஆனால் மூவருமே கிளீன் போல்டு செய்து அசத்தினர். இந்திய அணி வெற்றி பெற்றது. ஒரு பந்தை கூட ஸ்டம்பில் போடமுடியாமல் அசிங்கப்பட்டது பாகிஸ்தான்.

irfan pathan reveals why pakistan bowlers failed in bowled out in 2007 t20 world cup

பாகிஸ்தான் அணியில் தொழில்முறை பவுலர்களால் செய்ய முடியாததை, சேவாக், ராபின் உத்தப்பா ஆகிய பேட்ஸ்மேன்களை வைத்து சாதித்துக்காட்டியது இந்திய அணி. அதற்கு, அப்போதைய பவுலிங் பயிற்சியாளராக இருந்த வெங்கடேஷ் பிரசாத், பேட்ஸ்மேன்களை போல்டு அவுட் செய்து பயிற்சி எடுப்பதை வழக்கமாக்கியதுதான் காரணம். சேவாக், உத்தப்பா ஆகிய பேட்ஸ்மேன்கள் பயிற்சியில் பந்துவீசியதையும் சிறப்பாக போல்டு அவுட் செய்ததையும் பார்த்துத்தான் அவர்களை வீசவைத்தார் வெங்கடேஷ் பிரசாத்.

இந்திய பேட்ஸ்மேன்களை பயிற்சியில், வெங்கடேஷ் பிரசாத் போல்டு அவுட் செய்யவைத்து பழக்கியதுதான் இந்திய வீரர்கள் அசத்தியதற்கு காரணம். அதை ராபின் உத்தப்பாவும் இதை தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அந்த போல்டு அவுட் முறையில் பாகிஸ்தான் வீரர்கள் சொதப்பியதற்கான காரணம் என்னவென்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள இர்ஃபான் பதான், போல்டு அவுட் முறையில் என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறியதை அந்த அணியின் கேப்டனே(ஷோயப் மாலிக்) செய்தியாளர்கள் சந்திப்பில் ஒப்புக்கொண்டார். திடீரென போல்டு அவுட் செய்ய வேண்டும் என்றதும், பாகிஸ்தான் வீரர்கள், இயல்பான முழு ரன்னப்பில் வந்து வீசுவதா அல்லது பாதி ரன்னப்பில் வீசுவதா என்று திணறினர். இந்திய வீரர்கள் போல்டு அவுட்டிற்கு தயாராக இருந்ததால், அசத்தினர். போல்டு அவுட்டில் இரு அணிகளுக்கும் இடையே கொஞ்சம் கூட போட்டியே இல்லாமல் இந்திய அணி வென்றது என்றார் இர்ஃபான் பதான். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios