Asianet News TamilAsianet News Tamil

நியூசிலாந்தை ஒயிட்வாஷ் பண்ணிட்டா போதுமா..? இந்திய அணியின் பெரிய ஓட்டையை சுட்டிக்காட்டிய இர்ஃபான் பதான்

இந்திய கிரிக்கெட் அணியின் பெரிய பிரச்னையை சுட்டிக்காட்டியுள்ளார் இர்ஃபான் பதான்.
 

irfan pathan points out an area of concern for india despite whitewashed new zealand in t20 series
Author
Chennai, First Published Nov 22, 2021, 9:04 PM IST

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறிய இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்தே, புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கு தயாராக தொடங்கிவிட்டது.

உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் அறிமுகமாகி அபாரமாக ஆடினர்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி நியூசிலாந்தை 3-0 என ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. இந்த தொடரை இந்திய அணி வென்றதற்கு இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும், சிறப்பான பவுலிங்கும் தான் காரணம். இந்த தொடரில் ஆடிய 3 போட்டிகளிலுமே இந்திய தொடக்க ஜோடி 50 ரன்களுக்கு மேல் குவித்தது. 

கடைசி டி20 போட்டியில் ரோஹித்தும் இஷான் கிஷனும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 6 ஓவரில் 69 ரன்களை குவித்தனர். மிடில் ஆர்டர் வீரர்கள்(4 முதல் 7) 45பந்துகளில் வெறும் 51 ரன்கள் மட்டுமே அடித்தனர். சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டானார். ரிஷப் பண்ட் அவரது ரோல் என்னவென்றே தெரியாமல், அடித்து ஆடுவதா அல்லது தடுப்பாட்டம் ஆடுவதா என்ற தெளிவே இல்லாமல் ஆடி, கடைசியில் தவறான ஷாட்டின் மூலம் ஆட்டமிழந்துவிடுகிறார். அவர் ஷாட் செலக்‌ஷனில் இன்னும் வளர வேண்டியிருக்கிறது.

இப்படியாக, இந்திய அணி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்திருந்தாலும், மிடில் ஆர்டர் பிரச்னை பெரும் பிரச்னையாகவே இருந்துவருகிறது. அதைத்தான் சுட்டிக்காட்டி பேசியுள்ளார் இர்ஃபான் பதான்.

இதுகுறித்து பேசியுள்ள இர்ஃபான் பதான், ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கை பொறுத்தமட்டில் அவரது ஷாட் செலக்‌ஷனில் அவர் இன்னும் கவனம் செலுத்திவருகிறார். குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக அவரது ஷாட் செலக்‌ஷனில் இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது. 2020லிருந்து இதுவரை 6-7 முறை ஸ்லாக் ஸ்வீப் ஷாட் ஆடமுயன்று ஆட்டமிழந்திருக்கிறார். சூர்யகுமார் யாதவ் மிகச்சிறந்த வீரர். ஆனால் ரிஸ்க்கான வீரர் என்று இர்ஃபான் பதான் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios