Asianet News TamilAsianet News Tamil

#IPL2021 சன்ரைசர்ஸ் அணியின் பெரிய பிரச்னையே வார்னர் தான்..! இர்ஃபான் பதான் அதிரடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மிகப்பெரிய பிரச்னையே அந்த அணியின் கேப்டன்சி தான் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
 

irfan pathan opines sunrisers hyderabad biggest problem is david warner captaincy
Author
Chennai, First Published May 10, 2021, 6:22 PM IST

ஐபிஎல் 14வது சீசன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு படுமோசமாக அமைந்தது. 14வது சீசனின் முதல் 6 போட்டிகளில் 5 தோல்விகளை சந்தித்தது சன்ரைசர்ஸ் அணி. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர், பேட்டிங் மற்றும் கேப்டன்சி ஆகிய இரண்டிலுமே சொதப்பினார்.

அதிரடி பேட்ஸ்மேனும் ஐபிஎல்லின் வெற்றிகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவருமான வார்னர், இந்த சீசனில் வெறும் 110 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடி 32.17 என்ற சராசரியுடன் 193 ரன்கள் மட்டுமே அடித்தார். கேப்டன்சியிலும் அவரது செயல்பாடுகள் திருப்தியளிக்கும்படி இல்லை.

irfan pathan opines sunrisers hyderabad biggest problem is david warner captaincy

அதன்விளைவாக, சீசனின் பாதியில் கேப்டன்சியிலிருந்து வார்னர் நீக்கப்பட்டு, கேன் வில்லியம்சன் கேப்டனாக்கப்பட்டார். இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணி குறித்து பேசியுள்ள இர்ஃபான் பதான், டாப் 4 அணிகளில் ஒன்றாக சன்ரைசர்ஸை வைத்திருந்தேன். ஆனால் அவர்கள் செம சர்ப்ரைஸ் கொடுத்தனர். அந்த அணியின் பெரிய பிரச்னையே வார்னரின் கேப்டன்சி தான். அவர் அணியை வழிநடத்திய விதம், பேட்டிங் ஆடிய விதம் ஆகிய இரண்டுமே மோசமாக இருந்தது. அதீத கவனத்துடன் பேட்டிங் ஆடினார்.

கேன் வில்லியம்சனை கேப்டனாக நியமித்ததிலிருந்தே, சன்ரைசர்ஸ் அணி நிர்வாகத்திற்கு வார்னரின் கேப்டன்சியிலும், அவர் எடுத்த முடிவுகளிலும் திருப்தியில்லை என்பது தெரிகிறது என்று இர்ஃபான் பதான் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios