இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

அயர்லாந்து அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. 3 போட்டிகளும் சவுத்தாம்ப்டனில் நடக்கின்றன. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டாம் கரனுக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலர் டாப்ளி ஆடுகிறார். 

இங்கிலாந்து அணிக்காக 10 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் ஆடியுள்ள ரீஸ் டாப்ளி, 2016ம் ஆண்டுக்கு பிறகு அவர் இங்கிலாந்து அணியில் ஆடவில்லை. இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டியில் தான் இங்கிலாந்து அணிக்காக மீண்டும் களமிறங்குகிறார் டாப்ளி.

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜேம்ஸ் வின்ஸ், டாம் பாண்ட்டன், இயன் மோர்கன்(கேப்டன்), சாம் பில்லிங்ஸ், மொயின் அலி, டேவிட் வில்லி, அடில் ரஷீத், ரீஸ் டாப்ளி, மஹ்மூத்.