அயர்லாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கெவின் ஓ பிரயன். 2006ம் ஆண்டு அயர்லாந்து அணியில் அறிமுகமான கெவின் ஓ பிரயன், இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிவருகிறார் கெவின் ஓ பிரயன். அயர்லாந்து அணிக்காக 3 டெஸ்ட், 148 ஒருநாள் மற்றும் 96 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

2011ல் இந்தியாவில் நடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெறும் 50 பந்தில் சதமடித்து மிரட்டியவர் கெவின் ஓ பிரயன். அதுமாதிரியான இன்னும் சில அதிரடி இன்னிங்ஸ்களை அயர்லாந்து அணிக்காக ஆடியுள்ளார் அவர். 

இந்நிலையில், அயர்லாந்தில் நடந்த உள்நாட்டு போட்டியில் நார்த்வெஸ்ட் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கெவின் ஓ பிரயன் 8 சிக்ஸர்களுடன் 37 பந்தில் 82 ரன்களை விளாசினார். இந்த 8 சிக்ஸரில் ஒரு சிக்ஸர், ஸ்டேடியத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது சொந்த காரையே பதம்பார்த்தது. கெவின் ஓ பிரயன் அடித்த ஷாட், அவரது காரை தாக்கியதில் கார் சேதமடைந்தது. அதை அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.