09:12 PM (IST) Dec 23

ஐபிஎல் ஏலத்தில் முதல் முறையாக விலைபோன ஜோ ரூட்

ஐபிஎல் ஏலத்தில் முதல் முறையாக ஒரு அணியால் எடுக்கப்பட்டார் ஜோ ரூட். டெஸ்ட் வீரராக அறியப்பட்டதால் அவர் மீது ஐபிஎல் ஏலத்தில் அணிகள் ஆர்வம் காட்டுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஏமாற்றத்தை சந்தித்துவந்த ஜோ ரூட்டை இந்த ஏலத்தில் ரூ.1 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 

07:53 PM (IST) Dec 23

அயர்லாந்து ஃபாஸ்ட் பவுலர் ஜோஷுவா லிட்டிலை வாங்கிய குஜராத் டைட்டன்ஸ்

அயர்லாந்து இடது கை ஃபாஸ்ட் பவுலர் ஜோஷுவா லிட்டில் டி20 உலக கோப்பையில் அபாரமாக பந்துவீசினார். அண்மைக்காலமாக டி20 கிரிக்கெட்டில் அசத்திவரும் ஜோஷுவா லிட்டிலை ரூ.4.4 கோடி என்ற நல்ல தொகைக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா இடது கை ஃபாஸ்ட் பவுலர். எனவே அந்த வகையில், ஜோஷுவா லிட்டிலின் திறமையை அடையாளம் கண்டு அவரை எடுத்துள்ளது குஜராத் அணி. 

06:13 PM (IST) Dec 23

கைல் ஜாமிசனை அடிப்படை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே

நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் கைல் ஜாமிசனை ரு.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே அணி. கைல் ஜாமிசனின் இணைவு சிஎஸ்கே அணியின் பவுலிங் யூனிட்டிற்கு வலுசேர்க்கும். 2021 ஐபிஎல் ஏலத்தில் ரூ.15 கோடிக்கு விலைபோன கைல் ஜாமிசன் இந்த ஏலத்தில் அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு சிஎஸ்கே அணியால் எடுக்கப்பட்டுள்ளார்.

05:22 PM (IST) Dec 23

ஷிவம் மாவியை வாங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி

இந்திய இளம் ஃபாஸ்ட் பவுலர் ஷிவம் மாவியை ரூ.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

05:06 PM (IST) Dec 23

நாராயண் ஜெகதீசனை ஏலத்தில் எடுத்தது கேகேஆர்

சிஎஸ்கே அணியால் கழட்டிவிடப்பட்ட பின், விஜய் ஹசாரே தொடரில் ஒரு இரட்டை சதம் உட்பட தொடர்ச்சியாக 5 சதங்களை விளாசி வரலாற்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் நாராயண் ஜெகதீசனை ரூ.90 லட்சத்திற்கு எடுத்தது கேகேஆர் 

04:22 PM (IST) Dec 23

ரூ.16 கோடிக்கு நிகோலஸ் பூரனை எடுத்தது லக்னோ அணி

வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் நிகோலஸ் பூரனை, டெல்லி கேபிடள்ஸுடன் போட்டி போட்டு ரூ.16 கோடிக்கு தட்டி தூக்கியது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி.


04:14 PM (IST) Dec 23

நிக்கோலஸ் பூரன்

லக்னோ அணி நிக்கோலஸ் பூரனை ரூ.16 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

04:10 PM (IST) Dec 23

லிட்டன் தாஸ்

வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

04:02 PM (IST) Dec 23

கேமரூன் க்ரீக்

மும்பை இந்தியன்ஸ் அணி கேமரூன் க்ரீக்கை ரூ.17.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி இந்த ஏலத்தை எடுத்துள்ளார்.

03:58 PM (IST) Dec 23

பென் ஸ்டோக்ஸை எடுத்தது சிஎஸ்கே

டெத் பவுலிங்கை வீசக்கூடிய ஒரு ஆல்ரவுண்டரை கண்டிப்பாக எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஏலத்திற்கு சென்றது சிஎஸ்கே. அந்தவகையில், சாம் கரனை எடுக்க முயன்றது. ரூ.20.55 கோடி கையிருப்பில் இருந்ததால் அவருக்கு அதிகமான கிராக்கி இருந்ததால் ஒரு கட்டத்தில் சிஎஸ்கே ஒதுங்கிக்கொண்டது. அவரை விட சீனியர் ஆல்ரவுண்டரும் மேட்ச் வின்னருமான பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு எடுத்தது சிஎஸ்கே அணி. 

03:33 PM (IST) Dec 23

ஜேசன் ஹோல்டர்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிஜேசன் ஹோல்டரை ரூ.5.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

03:28 PM (IST) Dec 23

ஷிகந்தர் ராஷா

ஷிகந்தர் ராஷாவை ரூ.50 லட்சத்திற்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

03:26 PM (IST) Dec 23

ஓடியன் ஸ்மித்

ஓடியன் ஸ்மித்தை ரூ.50 லட்சத்திற்கு குஜராஜ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

03:26 PM (IST) Dec 23

சாம் கரண்

சாம் கரணுக்கு போட்டி போட்ட பஞ்சாப், சென்னை, மும்பை: இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி சாம் கரணை ரூ.18.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

03:16 PM (IST) Dec 23

ஷகிப் அல் ஹசன்

வங்கதேச அணியின் டெஸ்ட் கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

03:04 PM (IST) Dec 23

அஜின்க்ய ரகானே:

வெறும் 50 லட்சத்திற்கு ஏலத்திற்கு சென்ற அஜின்க்ய ரகானே - சிஎஸ்கே அவரை ஏலம் எடுத்துள்ளது.

03:02 PM (IST) Dec 23

மாயங்க் அகர்வால்

சன் ரைசர்ஸ் நிறுவனம் மாயங்க் அகர்வாலை ரூ.8.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

02:53 PM (IST) Dec 23

2ஆவது வீரராக ஹேரி ப்ரூக்கை ரூ. 13.25 கோடிக்கு சன் ரைசர்ஸ் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. 

02:44 PM (IST) Dec 23

முதல் வீரராக கேன் வில்லியம்சன் ரூ.2 கோடிக்கு ஏலம் - குஜராத் அணி

02:41 PM (IST) Dec 23

5ஆவது முறையாக லண்டனைச் சேர்ந்த ஹூக் எட்மெடாஸ் இன்று ஏலத்தை தொடங்கினார்.