8ஆர்டிஎம், 5 வருட மெகா ஏலம், 4-6 வீரர்களை தக்க வைக்க அனுமதி கேட்கும் ஐபிஎல் உரிமையாளர்கள்!
ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள நிலையில் பிசிசிஐ அதிகாரிகளுடன் 10 அணிகளின் உரிமையாளர்கள் கலந்து ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.
ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான மெகா ஏலம் இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாக வரும் 30 அல்லது 31 ஆம் தேதிகளில் பிசிசிஐ மற்றும் 10 அணிகளின் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக அணி உரிமையாளர்களுக்கு என்ன வேண்டும் என்று பிசிசிஐ கேட்டுள்ளது.
Womens Asia Cup 2024 Prize Money: மகளிர் ஆசிய கோப்பை 2024 தொடருக்கான பரிசுத் தொகை எவ்வளவு?
அதில், ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்? சம்பளம், ஆர்டிஎம் கார்டு வசது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், தற்போது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடத்தப்படும் நிலையில் அதனை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்று உரிமையாளர்கள் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
வீரர்களின் சம்பளத்தை அணி உரிமையாளர்கள் நிர்ணயிக்க அதிகாரம் வழங்க வேண்டும். மேலும், வருடத்திற்கு ஒரு முறை சம்பளத்தை மாற்றி அமைக்க அதிகாரம் வழங்க வேண்டும். குறைந்தது 4 முதல் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்கு அணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். சில அணிகள் எந்த வீரரையும் தக்க வைத்துக் கொள்ளாமல், 8 ஆர்டிஎம் கார்டுகளை பயன்படுத்த ஐபிஎல் நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவாதங்களை மேற்கொள்ள இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.