ஐபிஎல் 16வது சீசனி டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஆடாததால் அந்த அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.  

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 16வது சீசன் வரும் மார்ச் 31ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனுக்கான ஏலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் நடத்தப்பட்டது. 

ஐபிஎல் 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்கும் நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்கிறார். அவர் முழு ஃபிட்னெஸ் பெற இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் அவர் இந்த ஐபிஎல்லில் ஆடமாட்டார். அதனால் அந்த அணி கேப்டன் இல்லாமல் இருந்தது.

சச்சின் பயங்கரமான மூளைக்காரர்.. அவரை ஸ்லெட்ஜிங் செய்தது எனக்கே எதிராக திரும்பியது.! சக்லைன் முஷ்டாக் வருத்தம்

இந்நிலையில், டேவிட் வார்னர் இந்த சீசனுக்கான டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வார்னர் தான் கேப்டன் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில், இன்று டேவிட் வார்னரை கேப்டனாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மும்பையில் சிறுவர்களுடன் ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆடிய வார்னர்..! வைரல் வீடியோ

ஐபிஎல்லில் 162 போட்டிகளில் ஆடிய நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் டேவிட் வார்னர். ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் கொண்டவர் வார்னர். வார்னரின் கேப்டன்சியில் தான் சன்ரைசர்ஸ் அணி 2016ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றது. ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான வார்னர் இந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸை வழிநடத்துவது அந்த அணிக்கு பலம்.