குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது புனே ஸ்டேடியத்தில் காதலர்கள் முத்தம் கொடுத்துக்கொண்ட புகைப்படம் செம வைரலாக பரவிவருகிறது.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோஸியேஷன் ஸ்டேடியத்தில் நடந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 171 ரன்கள் அடித்தது. 172 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணி 157 ரன்கள் மட்டுமே அடித்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியை காண வந்த பார்வையாளர்களில் இருந்த காதல் ஜோடி லிப் கிஸ் அடித்தது. அதை கேமராமேன் தவறவிடாமல் படம்பிடிக்க, அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
Scroll to load tweet…
