ஐபிஎல் 12வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. நான்காவது முறையாக இந்த சீசனில் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

இந்த சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளே ஆதிக்கம் செலுத்தின. ஐபிஎல்லில் இந்த இரு அணிகளே வெற்றிகரமான அணியாக திகழ்ந்துவருகின்றன. 

இந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ், சன்ரைசர்ஸ் அணிகளும் நன்றாக ஆடின. ஆனாலும் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர், பவுலிங் என அனைத்திலும் சிறந்த அணியாக திகழ்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் ஒருமுறை கோப்பையை தட்டிச்சென்றது. 

இறுதி போட்டி முடிந்ததும், இந்த சீசனுக்கான சூப்பர் ஸ்டிரைக்கர், சிறந்த கேட்ச், கேம் சேஞ்சர், ஸ்டைலிஷ் பிளேயர், வளர்ந்துவரும் இளம் வீரர் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. அந்த பட்டியலை பார்ப்போம். 

சீசனின் சூப்பர் ஸ்டிரைக்கர் - ஆண்ட்ரே ரசல்(கேகேஆர்)

சீசனின் சிறந்த கேட்ச்  - பொல்லார்டு vs சிஎஸ்கே

ஸ்டைலிஷ் பிளேயர் - கேல் ராகுல்(பஞ்சாப்)

சீசனின் மதிப்புமிகு வீரர் - ஆண்ட்ரே ரசல்(கேகேஆர்)

சிறந்த வளரும் வீரர் - ஷுப்மன் கில்(கேகேஆர்)

ஊதா தொப்பி(அதிக விக்கெட்டுகள்) - இம்ரான் தாஹிர்(சிஎஸ்கே)

ஆரஞ்சு தொப்பி(அதிக ரன்கள்) - வார்னர்(சன்ரைசர்ஸ் - 692 ரன்கள்)

சீசனின் கேம் சேஞ்சர் -  ராகுல் சாஹர்(மும்பை இந்தியன்ஸ்)

அதிவேக அரைசதம் - ஹர்திக் பாண்டியா vs கேகேஆர்(17 பந்துகள்)

ஃபேர்பிளே அவார்டு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்