டான் பிராட்மேனுக்கு பிறகு கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களாக சுனில் கவாஸ்கர், விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ஜெயசூரியா, ராகுல் டிராவிட், பாண்டிங் ஆகியோர் திகழ்கின்றனர். 

தற்போதைய காலக்கட்டத்தில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகியோர் சிறந்த வீரர்களாக பார்க்கப்படுகின்றனர். இவ்வாறு பல சிறந்த வீரர்கள் இருந்தாலும், கிரிக்கெட்டின் முகத்தை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாற்றியவர்கள் 3 பேர் தான் என இன்சமாம் உல் ஹக் கருதுகிறார். எனவே அவரது பார்வையில் கிரிக்கெட்டின் பரிணாமத்தை அந்த 3 வீரர்களின் பெயர்களை அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், பல ஆண்டுகளுக்கு முன்.. பேட்டிங்கிற்கு வித்தியாசமான வடிவம் கொடுத்தவர் விவியன் ரிச்சர்ட்ஸ். அவர் ஆடிய காலத்தில் பொதுவாக பேட்ஸ்மேன்கள், ஃபாஸ்ட் பவுலிங்கை பேக்ஃபூட்டில் தான் ஆடுவார்கள். காலை பின்னால் நகர்த்தித்தான் ஆடுவார்கள். விவியன் ரிச்சர்ட்ஸ் தான், ஃபாஸ்ட் பவுலிங்கை முன்வந்து எதிர்கொண்டு ஃப்ரண்ட் ஃபூட்டில் ஆடி அட்டாக் செய்தவர். ஃபாஸ்ட் பவுலிங்கை எப்படி அடித்து ஆடுவது என்பதை கற்றுக்கொடுத்ததே விவியன் ரிச்சர்ட்ஸ் தான். அவர் ஆல்டைம் சிறந்த வீரர்.

அடுத்த வீரர் சனத் ஜெயசூரியா.. முதல் 15 ஓவர்களில் ஃபாஸ்ட் பவுலர்களை அட்டாக் செய்து ஃபாஸ்ட் பவுலிங்கை அடித்து துவம்சம் செய்து ரன்களை குவித்துவிடுவார்.  ஜெயசூரியாவின் வருகைக்கு முன், காற்றில் பந்தை தூக்கியடிப்பவர் பேட்ஸ்மேனாகவே பார்க்கப்படமாட்டார். ஆனால் அந்த நிலையை மாற்றி, முதல் 15 ஓவர்களில், ஃபீல்டர்கள் அருகில் நிற்கும்போது பந்தை தூக்கியடித்தவர் ஜெயசூரியா தான். பந்தை காற்றில் தூக்கியடிக்கக்கூடாது என்ற கருத்தை மாற்றியவர் ஜெயசூரியா தான்.

Also Read - நான் எதிர்கொண்டதுலயே அவரோட பவுலிங்தான் ரொம்ப கஷ்டமா இருந்தது.. ஷேன் வாட்சனை மிரட்டிய ஃபாஸ்ட் பவுலர்

விவியன் ரிச்சர்ட்ஸ், ஜெயசூரியாவிற்கு அடுத்து கிரிக்கெட்டை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தியவர் டிவில்லியர்ஸ். முன்பெல்லாம் வீரர்கள் பெரும்பாலும் ஸ்டிரைட் பேட் தான் ஆடுவார்கள். ஆனால் டிவில்லியர்ஸ் தான் ரிவர்ஸ் ஸ்வீப் உள்ளிட்ட பல விதமான ஷாட்டுகளை ஆடி, வித்தியாசமான ஷாட்டுகளையும் ஆடலாம் என்பதை அறிமுகப்படுத்தியவர். அந்த வகையில் கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய 3 பேட்ஸ்மேன்கள் விவியன் ரிச்சர்ட்ஸ், ஜெயசூரியா மற்றும் டிவில்லியர்ஸ் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.