Asianet News TamilAsianet News Tamil

இந்திய அணியில் இடம் பிடிக்கணும்னா முதல்ல வெயிட்டை குறைங்க தம்பி..! பிரித்வி ஷாவிற்கு தேர்வாளர்கள் அட்வைஸ்

பிரித்வி ஷா இந்திய அணியில் இடம்பெற வேண்டுமென்றால், உடல் எடையை குறைக்க வேண்டும் என்று தேர்வாளர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
 

indian team selectors advice prithvi shaw to reduce his weight
Author
Chennai, First Published May 8, 2021, 4:51 PM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. வரும் ஜூன் 18ம் தேதி தொடங்கும் ஃபைனலுக்கான 20 வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.

இந்த அணியில் ஹர்திக் பாண்டியா, பிரித்வி ஷா ஆகியோர் இடம்பெறவில்லை. 2018-19 ஆஸி சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் அணியில் அறிமுகமான பிரித்வி ஷா, அந்த தொடரில் காயத்தால் விலகிய நிலையில், அதன்பின்னர் நடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சிறப்பாக ஆடினார். அதன்பின்னர் சரியாக ஆடாததால், மயன்க் அகர்வாலிடம் தனது ஓபனிங் ஸ்லாட்டை இழந்த பிரித்வி ஷா, கடைசியாக கடந்த ஆஸி., சுற்றுப்பயணத்தின் முதல் டெஸ்ட்டில் ஆடினார்.

ஆனால் படுமோசமான ஃபார்மினால், முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டானார். 2வது இன்னிங்ஸில் 4 ரன் மட்டுமே அடித்தார். அதனால் அடுத்த போட்டியில் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட பிரித்வி ஷா, விஜய் ஹசாரே தொடரில் அபாரமாக ஆடி, விஜய் ஹசாரே தொடரின் ஒரு சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்ததுடன், ஐபிஎல்லிலும் அபாரமாக ஆடினார்.

indian team selectors advice prithvi shaw to reduce his weight

ஆனாலும் அவர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான அணியில் இடம்பெறவில்லை. ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், கேஎல் ராகுல் ஆகிய 4 தொடக்க வீரர்கள் எடுக்கப்பட்டுள்ளனர். பிரித்வி ஷாவுக்கு இடம் கிடைக்கவில்லை.

பிரித்வி ஷா அண்மைக்காலமாக நல்ல ஃபார்மில் இருந்தபோதிலும் அவர் அணியில் இடம்பெறாததற்கு அவரது உடல் எடையே காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ரிஷப் பண்ட்டின் உடல் எடையை சுட்டிக்காட்டி அணியிலிருந்து அவர் ஓரங்கட்டப்பட்டதையும், அதன்பின்னர் உடல் எடையை குறைத்த பின்னர் அவர் அணியில் எடுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி, அதேபோலவே கடுமையாக உழைத்து உடல் எடையை குறைக்குமாறு பிரித்வி ஷா தேர்வாளர்களால் அறிவுத்தப்பட்டுள்ளார்.

indian team selectors advice prithvi shaw to reduce his weight

ஐபிஎல்லின் போதே பார்த்தோம். பிரித்வி ஷாவின் உடல் எடை அதிகமாகத்தான் இருந்தது. 21 வயதே ஆன பிரித்வி ஷா திறமையான பேட்ஸ்மேனாகவே இருந்தாலும், ஃபிட்னெஸும் அவசியம் என்பதால் அவர் உடல் எடையை குறைக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அவர் எவ்வளவு விரைவாக உடல் எடையை குறைக்கிறாரோ அவ்வளவு சீக்கிரம் இந்திய அணியில் இடம்பெறுவார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios