பெங்கால் மற்றும் ஆந்திரா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியின் இடையே, பெங்கால் அணியின் ஓய்வறைக்குள் சென்றுள்ளார் தேவாங் காந்தி. 

ஊழல் தடுப்பு விதிமுறைகளின் படி, ஒரு அணியின் ஓய்வறைக்குள், அந்த அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி நிர்வாகத்தினரை தவிர மற்றவர்கள் செல்லக்கூடாது. எனவே ஓய்வறைக்குள் நுழைந்த தேவாங் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக மனோஜ் திவாரி தெரிவித்தார்.

Also Read - கங்குலி - டிராவிட் திடீர் சந்திப்பு.. பரபரப்பு பின்னணி

Also Read - இவங்க 2 பேரும் இதனால்தான் சிறந்த பேட்ஸ்மேன்களாக இருக்காங்க.. வியக்கவைக்கும் ஸ்கோர்கார்டு.. அரிதினும் அரிதான சம்பவம்

இதுகுறித்து தன்னிலை விளக்கமளித்த தேவாங் காந்தி, பெங்கால் அணியின் பயிற்சியாளர் அருண் லாலின் கேப்டன்சியில் தான் நான் முதன்முதலில் ஆடினேன். அவர் அழைத்ததால்தான் நான் பெங்கால் அணியின் ஓய்வறைக்கு சென்றேன்.

Also Read - டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ஆண்டர்சன்

எனக்கு முதுகு வலி இருந்தது. அதனால் பெங்கால் அணியின் பிசியோதெரபிஸ்ட்டை மருத்துவ அறைக்கு அழைப்பதற்காக, அணியின் பயிற்சியாளரின் அனுமதி பெற்ற பிறகே அங்கு சென்றேன் என்று விளக்கமளித்துள்ளார் தேவாங் காந்தி.