இங்கிலாந்து டெஸ்ட் அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 2002ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டிலும் 2003ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமான ஆண்டர்சன், 2015ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடினார். 194 ஒருநாள் போட்டிகளில் ஆடி 269 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆண்டர்சன், 2015க்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் ஆடிவருகிறார். 

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடந்துவருகிறது. 

இந்த போட்டி, ஜேம்ஸ் ஆண்டர்சனின் 150வது டெஸ்ட் போட்டி. இதன்மூலம் 150 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முதல் ஃபாஸ்ட் பவுலர் என்ற வரலாற்று சாதனையை ஆண்டர்சன் படைத்துள்ளார். தனது 150வது போட்டியின் முதல் பந்திலேயே தென்னாப்பிரிக்காவின் தொடக்க வீரர் டீன் எல்கரை வீழ்த்தினார்

Also Read - கங்குலி - டிராவிட் திடீர் சந்திப்பு.. பரபரப்பு பின்னணி

ஆண்டர்சன். ஆண்டர்சனுக்கு அடுத்து அதிகமான போட்டிகளில் ஆடிய ஃபாஸ்ட் பவுலரும் இங்கிலாந்துதான். ஸ்டூவர்ட் பிராட் தான் அந்த வீரர். பிராடிற்கு இது 135வது டெஸ்ட் போட்டி. எனவே ஸ்டூவர்ட் பிராடும் தனது கெரியர் முடிவதற்குள் கண்டிப்பாக 150 டெஸ்ட் போட்டிகள் என்ற மைல்கல்லை எட்டிவிடுவார்.