Asianet News TamilAsianet News Tamil

ஆசிய கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலகக் கோப்பை என மூன்றிலும் தோற்ற டிராவிட் தலைமையிலான இந்திய அணி!

தலைமை பயிற்சியாளர் டிராவிட் தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலகக் கோப்பை என்று மூன்றிலும் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

Indian Team Head Coach Rahul Dravid May Replace Shortly
Author
First Published Jun 18, 2023, 10:42 AM IST

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தலைமையில் ஆசிய கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் டி20 உலகக் கோப்பை என்று எல்லாவற்றிலும் தோல்வி அடைந்து வெளியேறியது. இதன் காரணமாக பயிற்சியாளரான டிராவிட்டை மாற்ற பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

உலகக் கோப்பைக்கான 10ஆவது அணி எது? தகுதிச் சுற்றில் 32 போட்டிகள்: நாளை முதல் ஆரம்பம்!

இந்திய அணிக்கு பயிற்சியாளராக வரும் தகுதி கொண்டவர்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். அதில் முதலாவதாக இருப்பவர் ஸ்டீபன் பிளமிங். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து 5 முறை சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றதோடு, பல முறை இறுதிப் போட்டிக்கும் சென்னை அணி வந்துள்ளது. ஆகையால், இந்திய அணியின் பயிற்சியாளராக வருவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 இன்னிங்ஸிலும் சதம் அடித்த வங்கதேச வீரர் நஜ்முல் ஷாண்டோ வரலாற்று சாதனை!

இவரைத் தொடர்ந்து 2ஆவது இடத்திலிருப்பவர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளரான ஆசிஸ் நெஹ்ரா. அறிமுகமான முதல் சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற காரணமாக இருந்தவர். 2ஆவது சீசனிலும் இறுதிப் போட்டி வரை சென்றுள்ளது. இந்திய அணியில் இடம் பெற்ற ஆசிஸ் நெஹ்ரா 17 டெஸ்ட் போட்டிகளிலும், 120 ஒருநாள் போட்டிகளிலும், 27 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் சிறப்பான கேட்ச்: பறந்து பிடித்த இங்கிலாந்து வீரர் பிராட்லி ஹர்ரி: குவியும் பாராட்டுக்கள்!

கடைசி இடத்தில் இருப்பவர் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே. இவரது தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் 2 முறை டிராபியை கைப்பற்றியது. இவரது அனுபவம் மற்றும் கேப்டன்ஷிப் ஆகியவை இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு போதும் ஒரு பந்து வீச்சாளராக மாறவே கூடாது – ரவிச்சந்திரன் அஸ்வின் ஃபீல் அன்ஹேப்பி!

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் தான் தலைமை பயிற்சியாளர்களாக இருந்துள்ளனர். அவர்களில் கபில் தேவ், சஞ்சய் பங்கர், ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே. தற்போது டிராவிட். இந்த ஆண்டுக்குள்ளாக அவர் மாற்றப்படுவதற்கும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios