India Test Squad: இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் – இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்திற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. வரும் 25ஆம் தேதி முதல் மார்ச் 11ஆம் தேதி வரையில் இந்த டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து லயன்ஸ் அணியானது மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாட இருக்கிறது. இதில், இந்திய ஏ அணி பங்கேற்க உள்ளது.
கொல்கத்தா தாதா சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர்!
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடும் இந்தியா ஏ அணியில் இடம்பிடித்துள்ள 12 பேர் கொண்ட அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த பிரதோஷ் ரஞ்சன் பால், சாய் சுதர்சன் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வர தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், ரஜத் பட்டிதார், சர்ஃபராஸ் கான் துருவ் ஜுரெல், கேஎஸ் பரத், மானவ் சுதர், புல்கித் நரங், நவ்தீப் சைனி, துஷார் தேஷ்பாண்டே, வித்வாத் காவேரப்பா, ஆகாஷ் தீப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பயிற்சி போட்டியானது வரும் 12 ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரையில் நடக்க இருக்கிறது.
இந்தியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு பேட்டிங் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். அதுவும் 10 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் முதல் 9 நாட்கள் மட்டுமே அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தலைமை பயிற்சியாளர் நீல் கில்லீனுடன் உதவி பயிற்சியாளர்களான ரிச்சர்ட் டாசன் மற்றும் கார்ல் ஹாப்கின்சன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவார். அதே நேரத்தில் முன்னாள் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் ஒரு வழிகாட்டியாக பயிற்சி குழுவில் ஒரு பகுதியாக இருப்பார். இங்கிலாந்து லயன்ஸ் பேட்டிங் ஆலோசகராக இருக்கும் இயான் பெல் தற்போது பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியுடன் இருக்கிறார். ஆகையால், அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தான் இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும், முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்) என்று 2 விக்கெட் கீப்பர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் என்று 4 சுழற்பந்து வீச்சாளர்களும், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் குமார் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் குமார்.
ஜிம்பாப்வேயை வச்சு செஞ்ச வணிந்து ஹசரங்கா – அசால்டா 7 விக்கெட் எடுத்து சாதனை!
🚨 NEWS 🚨#TeamIndia's squad for the first two Tests against England announced 🔽
— BCCI (@BCCI) January 12, 2024
Rohit Sharma (C ), S Gill, Y Jaiswal, Virat Kohli, S Iyer, KL Rahul (wk), KS Bharat (wk), Dhruv Jurel (wk), R Ashwin, R Jadeja, Axar Patel, Kuldeep Yadav, Mohd. Siraj, Mukesh Kumar, Jasprit…
டெஸ்ட் போட்டி அட்டவணை:
ஜனவரி 25- ஜனவரி 29:
இந்தியா – இங்கிலாந்து – முதல் டெஸ்ட், ஹைதராபாத் – காலை 9.30 மணி
பிப்ரவரி 02 – பிப்ரவரி 06:
இந்தியா – இங்கிலாந்து – 2ஆவது டெஸ்ட், விசாகப்பட்டினம் – காலை 9.30 மணி
பிப்ரவரி 15 – பிப்ரவரி 19
இந்தியா – இங்கிலாந்து – 3ஆவது டெஸ்ட், ராஜ்கோட் – காலை 9.30 மணி
பிப்ரவரி 23 – பிப்ரவரி 27
இந்தியா – இங்கிலாந்து – 4ஆவது டெஸ்ட், ராஞ்சி – காலை 9.30 மணி
மார்ச் 07 – மார்ச் 11:
இந்தியா – இங்கிலாந்து – 5ஆவது டெஸ்ட், தரம்சாலா – காலை 9.30 மணி
இங்கிலாந்து லயன்ஸ் அணி: (பயிற்சி போட்டி)
ஜோஷ் போஹானன் (கேப்டன்), கேசி ஆல்ட்ரிட்ஜ், பிரைடன் கார்ஸ், ஜாக் கார்சன், ஜேம்ஸ் கோல்ஸ், மாட் ஃபிஷர், கீட்டன் ஜென்னிங்ஸ், டாம் லாவ்ஸ், அலெக்ஸ் லீஸ், டான் மௌஸ்லி, கால்லம் பார்கின்சன், மாட் பாட்ஸ், ஆலி பிரைஸ், ஜேம்ஸ் ரீ மற்றும் ஆலி ராபின்சன்.
பயிற்சி போட்டி அட்டவணை:
12-13 ஜனவரி: இங்கிலாந்து லயன்ஸ் v இந்தியா ஏ, நரேந்திர மோடி மைதானம் – மைதானம் பி, அகமதாபாத்.
17-20 ஜனவரி: இங்கிலாந்து லயன்ஸ் v இந்தியா ஏ, நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்
24-27 ஜனவரி: இங்கிலாந்து லயன்ஸ் v இந்தியா ஏ, நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்
1-4 பிப்ரவரி: இங்கிலாந்து லயன்ஸ் v இந்தியா ஏ, நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்
- Alex Lees
- Brydon Carse
- Callum Parkinson
- Carl Hopkinson
- Dan Mousley
- Dinesh Karthik
- England Lions Squad
- England Lions coaching team
- England Lions team
- England Lions vs India A
- England Lions vs India A Schedule
- Graeme Swann
- IND vs ENG Test Series
- Ian Bell
- India A Squad
- India Test Squad
- India Test Squad against England
- India vs England
- India vs England 1st 2 Test
- India vs England Team Squad
- Jack Carson
- James Coles
- James Rew and Ollie Robinson
- Josh Bohannon
- Kasey Aldridge
- Keaton Jennings
- Matt Fisher
- Matt Potts
- Mo Bobat
- Neil Killeen
- Ollie Price
- Richard Dawson
- Tom Lawes
- Wales Cricket Board