இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரங் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் கிரிக்கெட் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே எம்.எஸ்.தோனி, மேரி கோம், கபில் தேவ், மிதாலி ராஜ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகியிருக்கின்றன. அந்த வகையில் தற்போது சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறும் படமாக உருவாக்கப்பட இருக்கிறது.

Tim Southee 150: வரலாற்று சாதனை படைத்த டிம் சவுதி – டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை!

இதில், பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விக்ரமாதித்யா மோத்வானே கங்குலியின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கர்க் ஆகியோர் மிகவும் உற்சாகமான இந்தப் படத்தை தயாரிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கணுக்கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு பயிற்சியை தொடங்கிய சூர்யகுமார் யாதவ் – பேப் ஸ்டெப்ஸ் வீடியோ பதிவிட்ட ஸ்கை!

கடந்த ஆண்டு முதல் ஆயுஷ்மான் இந்தப் படத்திற்கான விவாதத்தில் இருக்கிறார். விரைவில் அதற்கான தயாரிப்புகளை தொடங்குவார். ஆயினும்கூட, 34 வயதான அவர் தனது படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு விளையாட்டின் தீவிர பயிற்சிக்கு செல்ல வேண்டும். இது 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியாகும் என்று தெரிகிறது.

"இந்த படத்தை தங்கள் லவ் பிலிம்ஸ் பேனரில் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கர்க் ஆகியோர், ஆயுஷ்மான் குரானா மற்றும் விக்ரமாதித்யா மோத்வானே ஆகியோரை ஒருங்கிணைத்து சிக்ஸர் அடித்துள்ளனர். இருவரும் பல ஆண்டுகளாக நம்பமுடியாத உழைப்புடன் தங்களை வலிமைமிக்க சக்திகளாக நிலைநிறுத்திக் கொண்டனர்."

ஆஸியிடம் வாங்கிய அடி பத்தாதுன்னு இப்போ நியூசியிடம் அடி வாங்கும் பாகிஸ்தான் – முதல் டி20 நியூசி, வெற்றி!

"கங்குலி போன்ற இடது கை பேட்ஸ்மேனான ஆயுஷ்மான், அவரது வாழ்க்கை வரலாற்றுக்கு மிகவும் பொருத்தமானவர், அதே நேரத்தில் மோத்வானே ஏற்கனவே உதான், லூட்டேரா, பவேஷ் ஜோஷி சூப்பர் ஹீரோ மற்றும் ஜூபிலி போன்ற படங்களில் தனது தேர்ச்சியை நிரூபித்துள்ளார். விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தாவில் உள்ள பெஹாலாவில் 1972 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பிறந்தவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. 1992 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியுளார். 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7212 ரன்கள் குவித்துள்ளார். இதே போன்று, 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11,363 ரன்கள் எடுத்துள்ளார்.

ஜிம்பாப்வேயை வச்சு செஞ்ச வணிந்து ஹசரங்கா – அசால்டா 7 விக்கெட் எடுத்து சாதனை!