ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் போட்டி நாளை மும்பை வான்கடேவில் நடக்கிறது. அடுத்த இரண்டு போட்டிகள் முறையே 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் முறையே ராஜ்கோட் மற்றும் பெங்களூருவில் நடக்கவுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கும் அணி குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தவான் காயத்தால் கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் ஆடாத நிலையில், அவருக்கு பதிலாக தொடக்க வீரராக இறங்கிய ராகுல், அதிரடியாகவும் அதேநேரத்தில் சிறப்பாகவும் ஆடி நன்றாக ஸ்கோர் செய்துள்ளார். உலக கோப்பையிலும் தவான் காயத்தால் பாதியில் வெளியேறிய பின்னர், ரோஹித்துடன் இணைந்து தொடக்க வீரராக இறங்கிய ராகுல், அபாரமாக ஆடினார். 

Also Read - இந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை எந்த அணி வெல்லும்..? ரிக்கி பாண்டிங் அதிரடி

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ராகுல் சிறப்பாக ஆடி தனது இடத்தை உறுதி செய்த நிலையில், தவான் மீண்டும் அணிக்கு திரும்பியதால், ரோஹித்துடன் அவர்கள் இருவரில் யார் தொடக்க வீரராக இறங்குவார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கான பதிலை கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கேப்டன் கோலி. அப்போது, இதுகுறித்து பேசிய கோலி, தவான் - ராகுல் ஆகிய இருவருமே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆட வாய்ப்புள்ளது. நான் எனது பேட்டிங் ஆர்டரில்(3) தான் ஆடுவேன் என்றெல்லாம் இல்லை. நான் எந்த வரிசையில் வேண்டுமானால் ஆடுவேன். ஒரு கேப்டனாக அணியின் நலன் கருதி, திறமையான வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது மட்டுமல்லாமல், எதிர்கால அணியை கட்டமைத்து கொடுத்துவிட்டு செல்வதும் எனது பணி என்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். 

Also Read - வான்கடேவில் இரவு சேர் போட்டு உட்கார்ந்த ஆஸ்திரேலியா ஹெட் கோச்.. பனிப்பொழிவு சவாலை எதிர்கொள்ள அதிரடி திட்டத்துடன் வெறித்தனமா பயிற்சி செய்யும் ஆஸி., வீரர்கள்

கோலி கூறியதிலிருந்து, ரோஹித் - தவான் தொடக்க வீரர்களாகவும், ராகுல் மூன்றாம் வரிசையிலும் இறங்குவார்கள் என்று தெரிகிறது. கோலி தனது மூன்றாம் வரிசையை ராகுலுக்கு கொடுத்துவிட்டு நான்காம் வரிசையில் கோலி இறங்கவுள்ளார். கோலி மூன்றாம் வரிசையில் இறங்கியதால்தான் ரன்களை குவித்து நிறைய சாதனைகளை படைத்துவருகிறார். நான்காம் வரிசையில் இறங்கினால் பெரியளவில் ரன்களை குவிக்கமுடியாது. ஆனால் தனிப்பட்ட முறையில் தனது சாதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அணியின் நலன் கருதி, தனது பேட்டிங் ஆர்டரை தாரைவார்த்ததோடு, எதிர்காலத்திற்கான அணியை கட்டமைக்கும் பணியை தற்போதே தொடங்கிவிட்டார் கேப்டன் கோலி.