Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அஷ்வின் இடம்பிடிக்க காரணம் இதுதான்..! கேப்டன் விராட் கோலி ஓபன் டாக்

கடந்த 4 ஆண்டுகளாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருந்த சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டதற்கான காரணம் என்னவென்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
 

indian skipper virat kohli explains the reason behind ravichandran ashwin selection in team india for t20 world cup
Author
Dubai - United Arab Emirates, First Published Oct 17, 2021, 9:28 PM IST

தோனி தலைமையிலான இந்திய அணியின் பிரதான ஸ்பின்னராக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின், கோலி கேப்டன் பொறுப்பேற்ற பின்னர் ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து நீக்கப்பட்டார். 2017ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆடவில்லை.

ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் ஆஃப் ஸ்பின்னரான அஷ்வினுக்கு அணியில் இடம் கிடைக்காமல் இருந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசி உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களையும் திணறடித்ததன் விளைவாக, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார் அஷ்வின்.

இதையும் படிங்க - இளம் வீரர்கள் நிறைய இருக்காங்க.. தல தோனியும் இருக்கார்..! இந்த டி20 உலக கோப்பையை தூக்குறோம்.. கோலி நம்பிக்கை

இந்நிலையில், அஷ்வினை டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுத்தது குறித்து பேசியுள்ள கேப்டன் விராட் கோலி, அஷ்வினின் திறமைக்கு கிடைத்த வெகுமதிதான் இந்த வாய்ப்பு. ஒரு காலத்தில் இந்திய அணியின் முன்னணி ஸ்பின்னராக திகழ்ந்த அஷ்வினின் பவுலிங்கில் இடையில் தொய்வு ஏற்பட்டது. ஆனால் அஷ்வின் அவரது பவுலிங்கை மேம்படுத்தியுள்ளார். ஐபிஎல்லில் கடந்த 2 ஆண்டுகளாக சிறந்த பேட்ஸ்மேன்களை திணறடித்திருக்கிறார்.

இதையும் படிங்க - பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி அப்படி ஒன்றும் ஸ்பெஷல் கிடையாது..! அசால்ட்டா பேசி அதகளம் பண்ணும் கோலி

ஐபிஎல்லில் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசியதால் தான் அவருக்கு டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆஃப் ஸ்பின்னர் ஒருவர் தேவை என்ற வகையில், அஷ்வின் அணியில் இடம்பிடித்துள்ளார். அவரது அனுபவமும் திறமையும் தான் அவர் மீண்டும் அணியில் இடம்பிடிக்க காரணம் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios