Asianet News TamilAsianet News Tamil

இளம் வீரர்கள் நிறைய இருக்காங்க.. தல தோனியும் இருக்கார்..! இந்த டி20 உலக கோப்பையை தூக்குறோம்.. கோலி நம்பிக்கை

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி இருப்பது குறித்து பேசியுள்ள கேப்டன் விராட் கோலி, கோப்பையை வெல்லும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 

virat kohli speaks about t20 world cup and mentor dhoni role in team india
Author
Oman, First Published Oct 17, 2021, 7:35 PM IST

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது. இன்று முதல் தகுதிச்சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. வரும் 24ம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. 24ம் தேதி நடக்கும் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

விராட் கோலி தலைமையில் முதல் ஐசிசி கோப்பையை தூக்கும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. உலக கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்படவுள்ளார். தோனியின் ரோல் இந்திய அணிக்கு மிக முக்கியமானது. இளம் வீரர்களுக்கு தோனி பெரும் உதவியாக இருப்பார்.

2014 டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையிடம் தோற்ற இந்திய அணி, 2016ல் அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸிடம் தோற்று கோப்பையை இழந்த நிலையில், இந்த முறை கோப்பையை தூக்கும் முனைப்பில் உள்ளது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையை ஜெயிக்க இந்திய அணி என்ன செய்யணும்..? பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவுரை

இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடர் மற்றும் ஆலோசகர் தோனியின் முக்கியத்துவம் குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தோனி அணியுடன் இருப்பதே பெரும் உற்சாகம் தான். டி20 உலக கோப்பையில் மட்டுமல்ல; நாங்கள் அணிக்குள் வந்ததில் இருந்து வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தோனி எங்களுக்கு ஆலோசகராகத்தான் செயல்பட்டுவருகிறார். கிரிக்கெட் கெரியரை தொடங்கும் இளம் வீரர்களுக்கு தோனியுடனான கலந்துரையாடல் பெரியளவில் உதவும்.

இதையும் படிங்க - இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகுறீங்களா..? பிசிசிஐயின் ஆஃபரை நிராகரித்த ரிக்கி பாண்டிங்

தோனியின் ஆலோசனைகளும், ஆட்ட நுணுக்கங்களும் போட்டியையே மாற்றிவிடும். 2016 டி20 உலக கோப்பையில் கோப்பையை வெல்லும் அணியாக மதிப்பிடப்பட்டும், கோப்பையை வெல்ல முடியாமல் போய்விட்டது. 2014ல் ஃபைனலில் இலங்கையிடம் தோற்றுவிட்டோம். இந்த முறை இளம் வீரர்கள் நிறைய பேர் அணிக்குள் வந்திருக்கிறார்கள். போட்டியின் முடிவை எந்த சூழலிலும் மாற்ற வல்லவர்கள். இந்த உலக கோப்பையில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். வலுவான அணியாகவும் உணர்கிறோம் என்று கோப்பையை வெல்லும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் கோலி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios