டி20 உலகக் கோப்பைக்கு ரோகித், கோலி கண்டிப்பாக தேவை – பிரக்யான் ஓஜா!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து அவர்கள் டி20 உலகக் கோப்பை தொடருக்கு கண்டிப்பாக தேவை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றிய நிலையில் 3ஆவது போட்டியில் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 212 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா அதிகபட்சமாக 121 ரன்கள் குவித்தார். ரிங்கு சிங் 69 ரன்கள் எடுத்தார். பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் 212 ரன்கள் குவிக்க போட்டியானது டிரா செய்யப்பட்டு சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
24 மணி நேரத்தில் க்யூப்ஸ் 9732 எண்ணிக்கையுடன் கின்னஸ் உலக சாதனை படைத்த சென்னை மாணவர் கனிஷ்!
இதில், சூப்பர் ஓவரிலும் ஆப்கானிஸ்தான் 16 ரன்கள் எடுக்க, இந்தியாவும் 16 ரன்கள் எடுக்க டிரா ஆன நிலையில், 2ஆவது சூப்பர் ஓவரும் நடத்தப்பட்டது. இதில், இந்தியா 11 ரன்கள் எடுக்க ஆப்கானிதான் ஒரு ரன்னுக்கு 2 விக்கெட்டுகள் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்று இந்தியா கைப்பற்றியது. இந்த தொடருடன் டி20 தொடர் முடிந்தது. இனி டி20 உலகக் கோப்பை தான். இந்தியா நேரடியாக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாக ஐபிஎல் 2024 தொடர் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் தான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று உறுதி – தனிமைப்படுத்திக் கொண்ட டெவோன் கான்வே!
ஆதலால், வரும் ஜூன் மாதம் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பையில் அவர்கள் கண்டிப்பாக விளையாட வேண்டும். இது குறித்து ஓஜா கூறியிருப்பதாவது: ஆப்கானிஸ்தான் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டதால், ரோகித் சர்மா அவர்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று பொறுமையாக விளையாடினார். அதன் பிறகு அவர் விளையாடிய விதம் சிறப்பாகவும், நுணுக்கமாகவும் இருந்தது. இந்தப் போட்டியானது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய அணிக்கு எந்த அளவிற்கு முக்கியம் என்பதை காட்டுகிறது. இளம் வீரர்களை முன்னோக்கி அழைத்துச் செல்ல அவசியம் தேவை. இந்தப் போட்டியில் ரிங்கு சிங் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி சிறப்பாக பேட்டிங் செய்தார் என்று அவர் கூறியுள்ளார்.
தனக்கு தானே சிக்கலை தேடிக் கொள்ளும் அஜிங்க்யா ரஹானே – ரஞ்சி டிராபியில் தொடர்ந்து கோல்டன் டக்!