விஜய் ஹசாரே தொடரில் அருணாச்சல பிரதேச அணியை 306 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹரியானா அணி அபார வெற்றி பெற்றது. 

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று ஹரியானா - அருணாச்சல பிரதேச அணிகளுக்கு இடையேயான போட்டி கர்நாடகாவின் ஆலூரில் நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய ஹரியானா அணியின் தொடக்க வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் சைதன்யா பிஷ்னோய் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். இந்திய அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னராகவும் நட்சத்திர வீரராகவும் ஜொலித்தவர் யுவராஜ் சிங். இந்திய கிரிக்கெட் அணியில் யுவராஜ் சிங்கின் இடத்தை பூர்த்தி செய்ய மாற்று வீரர் பல ஆண்டுகளாக கிடைக்கவில்லை. அந்தளவிற்கு மிகச்சிறந்த வீரர் யுவராஜ் சிங்.

NZ vs IND: முதல் டி20 போட்டிக்கான ஹர்திக் பாண்டியா தலைமையிலான உத்தேச இந்திய அணி

இப்போது அதே யுவராஜ் சிங்கின் பெயரில் மற்றொரு இளம் வீரர் உருவெடுத்துள்ளார். 18 வயதான யுவராஜ் சிங், அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 116 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 131 ரன்களை குவித்தார். மற்றொரு தொடக்க வீரரான சைதன்யா பிஷ்னோய் 124 பந்தில் 134 ரன்களை குவிக்க, 50 ஓவரில் 397 ரன்களை குவித்தது ஹரியானா அணி.

ஐபிஎல் 2023: ஐபிஎல் அணிகள் விடுவித்த, தக்கவைத்த வீரர்கள்.. கையிருப்பு தொகை விவரம்

398 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய அருணாச்சல பிரதேச அணியை வெறும் 91 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 306 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்று ஹரியானா அணி சாதனை படைத்தது.