ரிங்குவின் சிக்ஸருக்கு பின்னால் அப்பாவின் வியர்வை துளிகள் தான் தெரிகிறது, சிலிண்டர் டெலிவரி செய்யும் வீடியோ!

இந்திய அணியில் நட்சத்திர வீரராக தன்னை உயர்த்திக் கொண்ட ரிங்கு சிங்குவின் ஒவ்வொரு சிக்ஸருக்கும் பின்னால் அவரது தந்தையின் வியர்வை துளிகள் தான் தெரிகிறது என்பதற்கான வீடியோ ஆதாரம் வெளியாகியிருக்கிறது.

Indian Cricketer Rinku Singh Father Khanchandra Singh Gas Cylinder Video Goes Viral rsk

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தவர் ரிங்கு சிங். தற்போது 26 வயதாகும் ரிங்கு சிங் இந்திய அணியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வருகிறார். தனது அதிரடியான பேட்டிங் திறமையால் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்கிறார். தோனிக்கு பிறகு சிறந்த பினிஷராகவும் இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இடம் பெற்றுள்ள ரிங்கு சிங், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது யாஷ் தயாள் வீசிய ஓவரில் மட்டும் 5 சிக்ஸர்கள் விளாசி அணியை வெற்றி பெற செய்தார். டி20 போட்டியில் அவர் விளையாடும் விதத்தைக் கண்டு அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. டி20 போட்டி என்றாலே சூர்யகுமார் யாதவ் நினைவுக்கு வரும் நிலையில், அவரைத் தொடர்ந்து தற்போது ரிங்கு சிங் தான் நினைவிற்கு வருகிறார்.

இதுவரையில் 15 டி20 போட்டிகளில் விளையாடிய ரிங்கு சிங் 2 அரைசதம் உள்பட 356 ரன்கள் குவித்துள்ளார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான ரிங்கு சிங் விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிங்கு சிங்கின் தந்தை கேஸ் டெலிவரி வேலை செய்து வருகிறார். சகோதரர் ஆட்டோ ஓட்டுகிறார். இப்படி மிகவும் சாதாரண குடும்ப பின்னணியில் வந்து இப்போது இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

வளர்ச்சியைத் தொடர்ந்து தனது தந்தையை ஓய்வெடுக்க சொல்லி அறிவுறுத்தினேன். ஆனாலும் அவர் தொடர்ந்து சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தான், ரிங்கு சிங்கின் தந்தை காசந்திர சிங் அலிகார் பகுதியில் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios