சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மோதும் நிலையில் போட்டியின் தொடக்கத்தில் இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
India National Anthem played in Lahore champions trophy 2025:ICC சாம்பியன்ஸ் டிராபி 2025ல் ஆஸ்திரேலியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே கடுமையான போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி பாகிஸ்தானின் லாகூரில் நடைபெறுகிறது. இதனிடையே திடீர்னு இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்ட சம்பவம், அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரு அணிகளின் தேசிய கீதத்திற்கு இடையே இந்திய கீதம் இசைக்கப்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.
லாகூரில் திடீரென இசைக்கப்பட்ட இந்திய தேசிய கீதம்!
ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ஒவ்வொரு போட்டியின் தொடக்கத்திலும் விளையாடும் இரு அணிகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்றைய போட்டியின் ்தொடக்கத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் தேசிய கீதங்கள் இசைப்பதற்கு ஆயத்தமாகினர். இந்நிலையில் திடீரென இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதால் இரு அணி வீரர்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
லாகூரில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
