Asianet News TamilAsianet News Tamil

இந்தியா vs ஸ்காட்லாந்து மேட்ச்.. இந்தியாவிற்கு பெரிய வெற்றி அவசியம்! இந்த தொடரில் முதல்முறையாக டாஸ் வென்ற கோலி

ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

india win toss opt to field against scotland in t20 world cup
Author
Dubai - United Arab Emirates, First Published Nov 5, 2021, 7:28 PM IST

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் 1-ல் இங்கிலாந்து அணியும், க்ரூப் 2-ல் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன.

க்ரூப் 1-ல் 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேற ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. க்ரூப் 2-ல் அரையிறுதிக்கு முன்னேற, ஆஃப்கானிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா ஆகிய 3 அணிகளுக்கு இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது.

இதையும் படிங்க - T20 World Cup அரையிறுதிக்கு முன்னேற இந்தியா என்ன செய்ய வேண்டும்? ஆஃப்கான் கையில் சிக்கிய இந்திய அணியின் குடுமி

அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க பெரிய வெற்றியை பெறவேண்டிய கட்டாயத்தில் ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. துபாயில் நடக்கும் இந்த போட்டியில், இந்த டி20 உலக கோப்பை தொடரிலேயே முதல் முறையாக டாஸ் வென்றார் விராட் கோலி. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த தொடரில் முதல் முறையாக இந்திய அணி இலக்கை விரட்டவுள்ளது. ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் ஆடவுள்ளது. 2வது இன்னிங்ஸில் பனிப்பொழிவு காரணமாக பந்துவீசுவது கடினம். அதனால் 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். அதனால் டாஸ் வென்ற கோலி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையும் படிங்க - நமீபியாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறிய நியூசி.,! இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை மேலும் கடினமாக்கிய நியூசிலாந்து

இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு கூடுதல் ஸ்பின்னராக வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் இந்திய அணி, அஷ்வின், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி ஆகிய 3ஸ்பின்னர்கள் மற்றும் ஷமி, பும்ரா ஆகிய 2 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடுகிறது.

இதையும் படிங்க - வெறும் இரண்டே விக்கெட்.. டி20 கிரிக்கெட்டில் பும்ராவிற்காக காத்திருக்கும் அபார சாதனை..!

இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி.

இதையும் படிங்க  - டி20 உலக கோப்பை அரையிறுதி மற்றும் ஃபைனலில் எந்தெந்த அணிகள் மோதும்..? ஷேன் வார்ன் போட்ட ரூட் மேப்

ஸ்காட்லாந்து அணி:

ஜார்ஜ் முன்சி, கைல் கோயட்ஸர் (கேப்டன்), மேத்யூ க்ராஸ் (விக்கெட் கீப்பர்), ரிச்சி பெரிங்டன், காலம் மெக்லியாட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், சாஃபியான் ஷாரிஃப், அலாஸ்டைர் இவான்ஸ், பிராட்லி வீல்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios