Asianet News TamilAsianet News Tamil

India vs Sri Lanka: கேப்டனாக முதல் டெஸ்ட்டிலேயே டாஸ் வென்றார் ரோஹித் சர்மா..! இந்திய அணியில் 3 ஸ்பின்னர்கள்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
 

india win toss opt to bat against sri lanka in first test
Author
Mohali, First Published Mar 4, 2022, 9:30 AM IST

இந்தியா - இலங்கை இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று மொஹாலியில் தொடங்கியது. ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இது. மேலும் விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி இதுவாகும்.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளி பட்டியலில் இந்திய அணி 5ம் இடத்தில் இருப்பதால், இனி இந்திய அணி ஆடும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியுமே மிக முக்கியம். அனைத்திலும் வெற்றி பெற்றாக வேண்டும். எனவே இந்த போட்டியில் வெற்றி முனைப்பில் களமிறங்கியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ரோஹித் சர்மா கேப்டனாக அவரது முதல் டெஸ்ட் போட்டியிலேயே டாஸ் வென்றுள்ளார்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் 3 ஸ்பின்னர்கள் மற்றும் 2 ஃபாஸ்ட் பவுலர்கள் எடுக்கப்பட்டுள்ளனர். இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும். குறிப்பாக கடைசி இன்னிங்ஸில் ஸ்பின்னர்கள் தான் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதால், கூடுதல் ஸ்பின்னர் இருப்பது கடைசி இன்னிங்ஸில் கூடுதல் ஆப்சனை அளிக்கும் என்பதால், ஜடேஜா, அஷ்வின், ஜெயந்த் யாதவ் ஆகிய மூவரும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ராவும் ஷமியும் மட்டும் ஆடுகின்றனர்.

ரோஹித்துடன் மயன்க் அகர்வால் தொடக்க வீரராக இறங்குகிறார். புஜாரா, ரஹானே ஆடாத நிலையில், ஹனுமா விஹாரி 3ம் வரிசையிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 5ம் வரிசையிலும் களமிறங்குகின்றனர்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா.

இலங்கை அணி:

திமுத் கருணரத்னே (கேப்டன்), லஹிரு திரிமன்னே, பதும் நிசாங்கா, சாரித் அசலங்கா, ஆஞ்சலோ மேத்யூஸ், தனஞ்செயா டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), சுரங்கா லக்மல், விஷ்வா ஃபெர்னாண்டோ, லசித் எம்பல்டேனியா, லஹிரு குமாரா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios