Asianet News TamilAsianet News Tamil

IND vs SA: மழையால் கைவிடப்பட்ட கடைசி டி20.. இந்திய மண்ணில் நீடிக்கும் தென்னாப்பிரிக்காவின் சாதனை

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டதையடுத்து, டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது.
 

india vs south africa last t20 ends as no result match and series leveled
Author
Bengaluru, First Published Jun 19, 2022, 10:06 PM IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியும், அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றன.

இதையடுத்து தொடர் 2-2 என சமனடைந்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடந்தது. 6.30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. 7 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி மழையால் 50 நிமிடம் தாமதமாக தொடங்கப்பட்டது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 3.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் அடித்திருந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இரவு 9.50 மணி வரை காத்திருந்து பார்க்கப்பட்டது. ஆனால் மழை நிற்காததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து டி20 தொடர் 2-2 என சமனடைந்தது. அதனால் இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்துள்ளன.

இதன்மூலம் இந்திய மண்ணில் டி20 தொடரை இழந்ததில்லை என்ற ரெக்கார்டை தக்கவைத்துள்ளது தென்னாப்பிரிக்க அணி. சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை முதல் முறையாக டி20 தொடரை வீழ்த்தும் வாய்ப்பு இந்திய அணிக்கு பறிபோனது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios