உலக கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான இன்றைய போட்டி டாஸ் போடாமலேயே கைவிடும் அபாயம் உள்ளது. 

இந்திய அணி ஆடிய 2 போட்டிகளிலுமே வெற்றி பெற்றது. அதேபோலவே நியூசிலாந்து ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் இதுவரை தோல்வியையே தழுவாத இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுவதால் இந்த போட்டி எதிர்பார்ப்பு எகிறியது. 

உலக கோப்பை போட்டிகள் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குவதால் 2.30 மணிக்கு டாஸ் போடுவது வழக்கம். ஆனால் போட்டி நடக்கும் நாட்டிங்காமில் மழை பெய்ததால், டாஸ் போடும் நேரத்தில் மைதானம் ஈரப்பதமாக இருந்தது. அதனால் டாஸ் போடுவது அரைமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. 

அதன்பின்னர் மீண்டும் மழை வந்ததால் மைதானம் மூடப்பட்டது. 4 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை வந்துகொண்டேயிருந்ததால் 5 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதுடன் வானம் மேகமூட்டத்துடனேயே உள்ளது. அதனால் தொடர்ந்து மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இரவு 7 மணி வரை மழை நிற்காத பட்சத்தில் போட்டி கைவிடப்படுவதற்கான வாய்ப்புள்ளது.