இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான தரம்சாலாவில் நடக்கும் 21ஆவது லீக் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்கும் தரம்சாலாவில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், பிற்பகல் 2 மணிக்கு 51 சதவிகிதம் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மைதம் தெரிவித்துள்ளது. இதனால் வெட் அவுட்பீல்டு காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. மேலும், மழையால் டாஸ் தாமதமும் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
India vs New Zealand: கேன் வில்லியம்சன் இல்லை; இந்தியாவிற்கு எதிராக களமிறங்கும் டிம் சவுதி!
போட்டியின் போது மழை குறுக்கீடு ஏற்பட்டால் ஓவர்கள் குறைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தரம்சாலாவில் நடந்த நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா போட்டியானது மழையால் டாஸ் தாமதமும் ஏற்பட்டது. அதன் பிறகு பெய்த மழையால் ஓவர்களும் குறைக்கப்பட்டது.
இன்று நடக்கும் போட்டியின் போது பிற்பகல் 3 மணிக்கு 47 சதவிகிதம் மழைக்கு வாய்ப்பு…
4 மணிக்கு – 14 சதவிகிதம் வாய்ப்பு…
5 மணிக்கு – 14 சதவிகிதம் வாய்ப்பு…
6 மணிக்கு – 10 சதவிகிதம் வாய்ப்பு…
இரவு 7 மணிக்கு – 2 சதவிகிதம் வாய்ப்பு…
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டால் போட்டி முழுவதும் ரத்து செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. போட்டி முழுவதும் ரத்து செய்யப்பட்டால் ஐசிசி விதிகளின் படி லீக் போட்டிகளுக்கு ரிசர்வ் டே கிடையாது. ஆதலால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படும்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிய 116 ஒரு நாள் போட்டிகளில் 58 போட்டிகளில் இந்தியாவும், 50 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், 7 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. ஒரு போட்டியானது டையில் முடிந்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என்று இந்தியா கைப்பற்றியது. இதில் 3ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா அதிகபட்சமாக 385 ரன்கள் குவித்தது. மேலும், ரோகித் சர்மா 101 மற்றும் சுப்மன் கில் 112 ரன்கள் குவித்தனர். ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதே போன்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்று இந்தியா கைப்பற்றியது.
இதுவரையில் இரு அணிகளும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 9 முறை மோதியுள்ளன. இதில், இந்தியா 3 முறையும், நியூசிலாந்து 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டது. இதில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 252 ரன்கள், குறைந்தபட்ச ஸ்கோர் 150 ரன்கள் ஆகும். இதே போன்று நியூசிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோர் 253 ரன்கள், குறைந்தபட்ச ஸ்கோர் 146 ரன்கள் ஆகும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய நியூசிலாந்து 239 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
