இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி திடீர் விலகல்! மீண்டும் அதே காரணம் தான்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக விராட் கோலி கூறியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக விலக விரும்புவதாகக் கூறியுள்ளார்.
விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரராக உள்ளவர் எடுத்துள்ள இந்த எதிர்பாராத முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரவிருக்கும் தொடரில் இந்திய அணிக்கு வலு சேர்க்கும் முக்கிய வீரராகக் கருதப்படும் விராட் கோலி விளையாடாமல் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர். விராட் கோலி இல்லாதது இங்கிலாந்துக்கு எதிரான தொடரை சவாலானதாக மாற்றக்கூடும் என்றும் கருதுகின்றனர்.
விராட் கோலி விலகல் குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது பெயரைத் திரும்பப் பெறுமாறு விராட் கோலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) கோரிக்கை விடுத்துள்ளார்" என்று தெரிவித்துள்ளது.
கிரிக்கெட்டும் முக்கியம், ராமர் கோயில் திறப்பு விழாவும் முக்கியம் – அயோத்தி வந்த விராட் கோலி!
கேப்டன் ரோஹித் ஷர்மா, அணி நிர்வாகம் மற்றும் அணி தேர்வாளர்களிடம் பேசிய பின்பே விராட் கோலி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் பிசிசிஐ கூறியிருக்கிறது. நாட்டுக்காக விளையாடுவதே முதன்மையான விஷயம் என்றும் அதே வேளையில், சில தனிப்பட்ட சூழ்நிலைகளில் அவர் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.
பிசிசிஐ கோலி எடுத்துள்ள முடிவை மதிப்பதாவும் அணி நிர்வாகமும் அவருக்கு ஆதரவை வழங்கியுள்ளது. செயல்திறன் மிக்க பிற வீரர்களுடன் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட முடியும் என நம்பிக்கை உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.
விராட் கோலியின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளித்து அவரது தனிப்பட்ட காரணங்கள் என்ன என்று ஊகங்களைப் பரப்ப வேண்டாம் எனவும் வரவிருக்கும் சவாலான டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியை ஆதரிக்க வேண்டும் எனவும் பிசிசிஐ கேட்டுக்கொண்டிருக்கிறது.
200 பில்லியன் டாலர் சொத்து... 700 மில்லியன் டாலர் ஜெட்... மிரள வைக்கும் உலகின் பணக்கார அரசியல்வாதி!