Asianet News TamilAsianet News Tamil

ஜூலையில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செல்லும் டீம் இந்தியா – 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அட்டவணை வெளியீடு!

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.

India Tour Of Zimbabwe for 5 Match T20I Series starts from 6th july to 14th july 2024 at Harare rsk
Author
First Published Feb 6, 2024, 6:51 PM IST

நடப்பு ஆண்டில் இந்திய அணி அடுத்தடுத்து பிஸியாகவே விளையாடி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. இதில், இந்திய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி 3 போட்டியிலும் வெற்றி பெற்றது. கடைசி போட்டி 2 முறை சூப்பர் ஓவருக்கு சென்றது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

பவுச்சர் சொல்வது தவறு – பொங்கி எழுந்த ரோகித் சர்மா மனைவி ரித்திகா!

இங்கிலாந்து தொடரை முடித்த கையோடு ஐபிஎல் தொடர் நடத்தப்படுகிறது. அதன் பிறகு வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடங்குகிறது. இந்த தொடர் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து ஜூலை மாதம் இந்திய அணியானது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.

ரோகித் சர்மா சரியாக பேட்டிங் ஆடவில்லை – கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கம், ஏன்? விளக்கம் கொடுத்த பயிற்சியாளர்!

இதற்கான அட்டவணையை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடத்தப்படுகிறது. இந்த 5 போட்டிகளும் ஹராரே மைதானத்திலேயே நடத்தப்படுகிறது. இந்த சுற்றுப்பயணமானது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் அதிக வாய்ப்புகளை வழங்குவது குறித்து இரு வாரியங்களுக்கு இடையே நடந்த விவாதங்களுக்குப் பிறகு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரோகித் சர்மா சரியாக பேட்டிங் ஆடவில்லை – கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கம், ஏன்? விளக்கம் கொடுத்த பயிற்சியாளர்!

இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியிருப்பதாவது: கிரிக்கெட்டிற்கு பங்களிப்பதில் பிசிசிஐ எப்போதும் முன்னோடியாக திகழ்கிறது. ஜிம்பாப்வே கிரிக்கெட்டிற்கு எங்களது ஆதரவு தேவை. சக உறுப்பினர் வாரியங்களை ஆதரிப்பதில் எங்களது அர்ப்பணிப்பு மற்றும் கிரிக்கெட்டில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான எங்களது கொள்கையுடன் ஒத்துப் போகிறது. மேலும், இருதரப்பு நாட்டு கிரிக்கெட்டை வலுவாகவும், வணிக ரீதியாக சாத்தியமானதாக மாற்ற பிசிசிஐ எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸை ஒயிட் வாஷ் செய்த ஆஸ்திரேலியா – 3ஆவது போட்டியில் 6.5 ஓவர்களில் 87 ரன்கள் எடுத்து வெற்றி!

இதே போன்று ஜிம்பாப்வே கிரிக்கெட் தலைவர் தவெங்வா முகுஹ்லானி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். ஜூலை மாதம் இந்தியா உடனான டி20 தொடரை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இது எங்களது நாட்டின் சர்வதேச ஈர்ப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இந்தியா - ஜிம்பாப்வே டி20 தொடர்:

ஜூலை 6, 2024 - இந்தியா - ஜிம்பாப்வே முதல் டி20 - ஹராரே

ஜூலை 7, 2024 - இந்தியா - ஜிம்பாப்வே 2ஆவது டி20 - ஹராரே

ஜூலை 10, 2024 - இந்தியா - ஜிம்பாப்வே 3ஆவது டி20 - ஹராரே

ஜூலை 13, 2024 - இந்தியா - ஜிம்பாப்வே 4ஆவது டி20 - ஹராரே

ஜூலை 14, 2024 - இந்தியா - ஜிம்பாப்வே 5ஆவது டி20 - ஹராரே

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios