Asianet News TamilAsianet News Tamil

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் இந்தியா..! 4ம் இடத்தில் இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறியது.
 

india takes second position in icc test championship points table after winning against england in second test
Author
Chennai, First Published Feb 16, 2021, 1:34 PM IST

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு நியூசிலாந்து அணி ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டது. இறுதி போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் அணியை தீர்மானிக்கும் முக்கியமான டெஸ்ட் தொடராக இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் அமைந்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் பெறும் வெற்றி விகிதத்தின் அடிப்படையில், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்பாக, புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறும். 

முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 70.2 சதவிகிதத்துடன் முதலிடத்திற்கு முன்னேறியது. இந்தியா 4ம் இடத்தில் இருந்தது. 2வது டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 69.7 சதவிகிதத்துடன் இந்திய அணி 2ம் இடத்திற்கு முன்னேறியது. நியூசிலாந்து 70 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 4ம் இடத்திற்கு பின் தங்கியுள்ளது.

india takes second position in icc test championship points table after winning against england in second test

இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் 1-1 என சமனடைந்துள்ள நிலையில், இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளன. இந்த தொடரை குறைந்தது 2-1 என வென்றால் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறும். குறைந்தது, 3-1 என வென்றால் இங்கிலாந்து இறுதி போட்டிக்கு முன்னேறும். 2-2 அல்லது 1-1 சமனடைந்தால் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுமே இறுதி போட்டிக்கு முன்னேற முடியாது; பதிலாக ஆஸி., அணி இறுதி போட்டிக்குள் சென்றுவிடும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios