நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகள் அறிவிப்பு.! டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியா

நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் அணிக்கான கேப்டனாக ஷிகர் தவானும், டி20 அணிக்கான கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

india odi and t20 squads announced for new zealand tour

டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணி, சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 2ல் இடம்பெற்று அருமையாக ஆடிவருகிறது. பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிடம் தோற்றிருந்தாலும், அடுத்து நடக்கவுள்ள வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

டி20 உலக கோப்பை நவம்பர் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் இந்திய அணி நவம்பர் 18 முதல் நவம்பர் 30 வரை நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடவுள்ளது.

இந்திய அணி இந்த 2 மாற்றங்களை செய்தே தீரணும்..! ஹர்பஜன் சிங் அதிரடி

அந்த சுற்றுப்பயணத்துக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சுற்றுப்பயணத்தில் கேப்டன் ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி ஆகிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.  டி20 அணியில் சஞ்சு சாம்சன், வாசிங்டன் சுந்தர், ஷுப்மன் கில், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக் ஆகிய வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. 

ஷிகர் தவான் தலைமையிலான ஒருநாள் அணியில் ஷபாஸ் அகமது, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய டி20 அணி:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக். 

டி20 உலக கோப்பை: வாழ்வா சாவா போட்டியில் நீயா நானானு மோதும் இங்கி., - நியூசி.,! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

இந்திய ஒருநாள் அணி:

ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஷபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios