Asianet News TamilAsianet News Tamil

ZIM vs IND: இந்திய அணியை அச்சுறுத்திய ஜிம்பாப்வே டெயிலெண்டர்கள்.! முதல் ODI-யில் இந்தியாவிற்கு எளிய இலக்கு

ஜிம்பாப்வே அணியை முதல் ஒருநாள் போட்டியில் 189 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி, 190 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுகிறது.
 

india bowlers restrict zimbabwe for 189 runs in first odi and chase easy target
Author
Harare, First Published Aug 18, 2022, 4:24 PM IST

இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய மெயின் அணி ஆசிய கோப்பையில் ஆடுவதற்கு தயாராகிவருவதால், கேஎல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தான் ஜிம்பாப்வே தொடரில் ஆடுகிறது.

ஹராரேவில் இன்று நடந்துவரும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையும் படிங்க - 3 & 4வது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் இந்தியாவிற்கு கடினமான போட்டிகள்..! முழு போட்டி பட்டியல்

இந்திய அணி:

ஷிகர் தவான், ஷுப்மன் கில், இஷான் கிஷன், கேஎல் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

ஜிம்பாப்வே அணி:

மருமாணி, இன்னசெண்ட் கையா, சீன் வில்லியம்ஸ், வெஸ்லி மாதவெரெ, சிக்கந்தர் ராஜா, ரெஜிஸ் சகாப்வா (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் இவான்ஸ், விக்டர் நியூயாச்சி, ரிச்சர்ட் கராவா.

முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணியின் டாப் 3 வீரர்களையுமே ஒற்றை இலக்கத்தில் வீழ்த்தி அசத்தீனார் தீபக் சாஹர். 4ம் வரிசையில் இறங்கிய சீன் வில்லியம்ஸை ஒரு ரன்னில் முகமது சிராஜ் வீழ்த்த, சிக்கந்தர் ராஜாவை 12 ரன்னில் பிரசித் கிருஷ்ணாவும் வீழ்த்தினார். 

இதையும் படிங்க - சூர்யகுமாருக்கு ஏற்ற பேட்டிங் ஆர்டர் இதுதான்..! லெஜண்ட் ரிக்கி பாண்டிங் கருத்து

பொறுப்புடன் ஆடி 35 ரன்கள் அடித்த கேப்டன் சகாப்வாவை அக்ஸர் படேல் வீழ்த்த, 110 ரன்களுக்கு ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜிம்பாப்வே அணியின் டெய்லெண்டர்களான இவான்ஸ் மற்றும் ரிச்சர்டு ஆகிய இருவரும் இணைந்து இந்திய அணியின் பவுலிங்கை அடித்து ஆடி 9வது விக்கெட்டுக்கு 70 ரன்களை சேர்த்தனர். இவான்ஸ் 33 ரன்களும், ரிச்சர்டு 34 ரன்களும் அடிக்க, அவர்களது பொறுப்பான பேட்டிங்கால் 189 ரன்களையாவது எட்டியது ஜிம்பாப்வே அணி.

40.3 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஜிம்பாப்வே அணி. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, அக்ஸர் படேல் ஆகிய மூவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணி 190 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios