Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பை: ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..! அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து பலப்பரீட்சை

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் ஜிம்பாப்வே அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. க்ரூப் 1ல் முதலிடத்தை பிடித்த இந்தியா, அரையிறுதியில் வரும் 10ம் தேதி அடிலெய்டில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
 

india beat zimbabwe by 71 runs will face england in semi final in t20 world cup
Author
First Published Nov 6, 2022, 5:04 PM IST

டி20 உலக கோப்பையில் க்ரூப் 1லிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், க்ரூப் 2லிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இன்று மெல்பர்னில் நடந்த கடைசி சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வேவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார்.

PAK vs BAN: ஷகிப் அல் ஹசனுக்கு தவறாக அவுட் கொடுத்தாரா தேர்டு அம்பயர்..? சர்ச்சை எல்பிடபிள்யூ.. வைரல் வீடியோ

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

ஜிம்பாப்வே அணி:

வெஸ்லி மாதவெர், கிரைக் எர்வின் (கேப்டன்), ரெஜிஸ் சகப்வா (விக்கெட் கீப்பர்), சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, டோனி முன்யோங்கா, ரியான் பர்ல், டெண்டாய் சத்தாரா, ரிச்சர்ட் நகர்வா, வெலிங்டன் மசகட்ஸா, ப்ளெஸ்ஸிங் முசாரபாணி.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 15 ரன்னிலும், விராட் கோலி 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய கேஎல் ராகுல் அரைசதம் அடித்தார். 35 பந்தில் 51 ரன்கள் அடித்தார் ராகுல். ரிஷப் பண்ட் 3 ரன்னில் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா 18 பந்தில் 18 ரன்கள் மட்டுமே அடித்தார். ஆனால் சூர்யகுமார் யாதவ் வழக்கம்போலவே தனது அதிரடியான பேட்டிங்கை ஆடி, ஜிம்பாப்வே பவுலிங்கை வெளுத்து கட்டினார். அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் அடித்த சூர்யகுமார் 25 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 186 ரன்களை குவித்தது.

187 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் பின்வரிசை வீரர் ரியான் பர்ல் மட்டும் அதிரடியாக பேட்டிங் ஆடி 22 பந்தில் 35 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 17.2 ஓவரில் வெறும் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஜிம்பாப்வே அணி.

ஐபிஎல் 2023: சிஎஸ்கே அணி கழட்டிவிடும் 2 வீரர்கள் இவர்கள் தான்..!

71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 8 புள்ளிகளுடன் க்ரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. எனவே அரையிறுதியில் க்ரூப் 1ல் 2ம் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை வரும் 10ம் தேதி அடிலெய்டில் எதிர்கொள்கிறது. எனவே வரும் 9ம் தேதி சிட்னியில் நடக்கும் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் மோதுகின்றன.
 

Follow Us:
Download App:
  • android
  • ios