Asianet News TamilAsianet News Tamil

ரோஹித் அதிரடி பேட்டிங்; தினேஷ் கார்த்திக் தரமான ஃபினிஷிங்! 2வது டி20யில் ஆஸி.,யை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-1 என தொடரை சமன் செய்தது.
 

india beat australia in second t20 and level the series by 1 1
Author
First Published Sep 23, 2022, 11:06 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி நாக்பூரில் நடந்தது. 

மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி மழையால் இரண்டரை மணி நேரம் தாமதமாக 9.30 மணிக்கு தொடங்கப்பட்டது. அதனால்  8 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.

இதையும் படிங்க - ஜடேஜாவை கேட்ட 2 ஐபிஎல் அணிகள்.. நோ சொன்ன சிஎஸ்கே..! சிஎஸ்கேவிடம் மாட்டிகிட்டு முழிக்கும் ஜடேஜா

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உமேஷ் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டு, பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), கேமரூன் க்ரீன், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), டேனியல் சாம்ஸ், சீன் அபாட், பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் அடித்து ஆட, கேமரூன் க்ரீன் 5 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார். க்ளென் மேக்ஸ்வெல் (0) மற்றும் டிம் டேவிட் (2) ஆகிய இருவரையும் க்ளீன் போல்டாக்கி அனுப்பினார் அக்ஸர் படேல். 

அடித்து ஆடி 15 பந்தில் 31 ரன்களை விளாசிய கேப்டன் ஃபின்ச்சை பும்ரா க்ளீன் போல்டாக்கி அனுப்பினார். அக்ஸர் படேல், பும்ரா ஆகிய இருவரும் அபாரமாக பந்துவீச, 7 ஓவரில் 71 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது ஆஸ்திரேலிய அணி. ஹர்ஷல் படேல் வீசிய 8வது ஓவரில் மேத்யூ வேட் 3 சிக்ஸர்களை விளாச, 8 ஓவரில் 90 ரன்களை குவித்து 91 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணைத்தது ஆஸ்திரேலிய அணி. அதிரடியாக ஆடிய மேத்யூ வேட் 20 பந்தில் 43 ரன்களை விளாசினார்.

இதையும் படிங்க - ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் யார் இந்திய அணியில் ஆடணும்? கில்கிறிஸ்ட்டே சொல்லிட்டார்.. கேளுப்பா ரோஹித்

8 ஓவரில் 91 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா முதல் ஓவரிலிருந்தே சிக்ஸர் அடிக்க தொடங்கினார். ரோஹித் சர்மா அடித்து ஆட, ராகுல் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸாம்பா வீசிய 5வது ஓவரில் கோலி (11) மற்றும் சூர்யகுமார் யாதவ் (0) அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா அபாரமாக பேட்டிங் ஆடி 20 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 46 அடித்து  கடைசி வரை நின்று போட்டியை முடித்து கொடுத்தார். கடைசி ஓவரில் இந்தியாவிற்கு 9ரன்கள் தேவைப்பட, முதல் 2 பந்தில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து தனது ஃபினிஷிங் ரோலை செவ்வனே செய்தார் தினேஷ் கார்த்திக். 

 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-1 என தொடரை சமன் செய்தது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios