MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஜடேஜாவை கேட்ட 2 ஐபிஎல் அணிகள்.. நோ சொன்ன சிஎஸ்கே..! சிஎஸ்கேவிடம் மாட்டிகிட்டு முழிக்கும் ஜடேஜா

ஜடேஜாவை கேட்ட 2 ஐபிஎல் அணிகள்.. நோ சொன்ன சிஎஸ்கே..! சிஎஸ்கேவிடம் மாட்டிகிட்டு முழிக்கும் ஜடேஜா

ரவீந்திர ஜடேஜாவை வேறு அணியிடம் டிரேட் செய்ய சிஎஸ்கே விரும்பவில்லை. சிஎஸ்கேவிற்கு ஜடேஜா ஆடவிரும்பாத போதிலும் அவரை அணியிலிருந்து விடுவிக்க சிஎஸ்கே விரும்பாததால் ஜடேஜா வசமாக மாட்டியுள்ளார். 

2 Min read
Author : karthikeyan V
Published : Sep 23 2022, 09:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளையாக திகழ்ந்தவர் ரவீந்திர ஜடேஜா. சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரராகவும், கேப்டன் தோனியின் ஆஸ்தான வீரராகவும் திகழ்ந்தவர் ஜடேஜா. கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்ட நிலையில், தொடர் தோல்விகளின் விளைவாக சீசனின் இடையே தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது ஜடேஜாவிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் அந்த சீசனில் அதன்பின்னர் அவர் ஆடவில்லை.

25

கேப்டனாக நியமிக்கப்பட்டு பின்னர் சீசனின் இடையே மாற்றப்பட்டதை பெரும் அவமானமாகவும், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும் கருதிய ஜடேஜா, சிஎஸ்கே அணி மீது கடும் அதிருப்தியடைந்தார்.

இதையும் படிங்க - பல வருஷமா இருக்கும் அந்த பலவீனத்தை சரி செய்யலைனா இந்திய அணி டி20 உலக கோப்பையை ஜெயிக்க முடியாது - கவாஸ்கர்

35

இதையடுத்து சமீபத்தில் சிஎஸ்கே அணியை சமூக வலைதளத்தில் அன்ஃபோலா செய்தார். அதனால் அடுத்த சீசனில் ஜடேஜா வேறு அணிக்கு ஆடலாம் என்று பேசப்பட்டது. ஆனால் கடந்த சீசனுக்கு முன் நடந்த மெகா ஏலத்தில் ஜடேஜாவை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்ததால், ஜடேஜா இன்னும் 2 சீசன்களுக்கு சிஎஸ்கே அணியின் ஒப்புதல் இல்லாமல் அந்த அணியிலிருந்து விலகமுடியாது.

45

சிஎஸ்கே - ஜடேஜா இடையே ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி அவரை தட்டித்தூக்க டெல்லி கேபிடள்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முயற்சி செய்தன. ஜடேஜாவை டிரேட் செய்யும்படி அந்த அணிகள் சிஎஸ்கேவை அணுகின. சிஎஸ்கேவும் ஜடேஜாவை டிரேட் செய்துவிடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிஎஸ்கேவோ ஜடேஜாவை அவ்வளவு எளிதில் விட விரும்பவில்லை. 

இதையும் படிங்க - ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் யார் இந்திய அணியில் ஆடணும்? கில்கிறிஸ்ட்டே சொல்லிட்டார்.. கேளுப்பா ரோஹித்

55

ஜடேஜாவை விட முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது. ஜடேஜா அதையும் மீறி வேறு அணிக்கு செல்ல முயல்வது ஐபிஎல்லில் அவருக்கு தடை விதிக்க வழிவகுக்கும். அதையும் மீறி அவர் சிஎஸ்கேவிற்கு ஆட விரும்பவில்லை என்றால், ஏதாவது காரணம் கூறி ஆடாமல் இருக்கலாம். அப்படி ஆடவில்லை என்றால், அவருக்கு ஊதியம் கிடைக்காது. எனவே ஜடேஜா இன்னும் 2 ஆண்டுகளுக்கு ஆடினால் சிஎஸ்கேவிற்காக ஆடவேண்டும். வேறு அணிக்காக ஆடமுடியாது.

About the Author

KV
karthikeyan V
ஐபிஎல்
சிஎஸ்கே

Latest Videos
Recommended Stories
Recommended image1
மகுடம் சூடா மன்னன்: 9000 ரன்களை கடந்த முதல் வீரர் - IPL வரலாற்றில் விராட் கோலி புதிய சகாப்தம்..!
Recommended image2
அவுட்டான கடுப்பில் மைதானப் பொருட்களை சேதப்படுத்திய கே.கே.ஆர் வீரர்.. செக் வைத்த பிசிசிஐ!
Recommended image3
MS Dhoni: இனி கிரவுண்டுக்கே வர மாட்டார்..? அணிக்கு திரும்பாத தோனியால் ஏக்கத்தில் ரசிகர்கள்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved