டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியானதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை ஒரே குரூப்பில் இடம் பெறச் செய்து ஐசிசி பக்காவா பிளான் போட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் நடத்தும் 2024 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரையில் நடக்க இருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், நேபாள், நியூசிலாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான், நமீபியா, ஓமன், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா உகாண்டா, கனடா என்று 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு – குரூப் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை!
இந்த 20 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இந்தப் குரூப் சுற்று போட்டிகள் ஜூன் 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் நடைபெறும். இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்த சூப்பர் 8 சுற்றானது 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். இந்த சூப்பர் 8 சுற்று போட்டிகள் ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 24 ஆம் தேதி வரையில் நடைபெறும். இதில், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
நம்பர் 1 அணி ரேங்கை இழந்த இந்தியா – ஐசிசி டெஸ்ட் அணிகளின் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம்!
ஜூன் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் முதல் மற்றும் 2ஆவது அரையிறுதிப் போட்டிகள் நடத்தப்படும். கடைசியாக ஜூன் 29ஆம் தேதி இறுதிப் போட்டி நடத்தப்படுகிறது. ஜூன் 1 ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியிலேயே குரூப் ஏ பிரிவில் உள்ள அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி டல்லாஸில் நடக்கிறது. இந்திய அணி விளையாடும் 4 போட்டிகளும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக முன்னாள் ஐபிஎல் அதிகாரி ரகுராம் ஐயர் நியமனம்!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே ஐசிசி இரு அணிகளையும் குரூப் ஏ பிரிவில் இடம் பெறச் செய்துள்ளது. இந்த 2 அணிகளைத் தவிர அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய 3 அணிகள் கத்துக்குட்டி அணிகளாக இடம் பெற்றுள்ளன. ஆதலால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் விளையாடும் 4 போட்டிகளில் ஏதாவது ஒன்றில் தோன்றாலும் கூட முதல் 2 இடங்களை பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வகையில் அட்டவணையை தயார் செய்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின்!
இதே போன்று ஒவ்வொரு அணியிலும் அட்டவணைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் குரூப் டி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து மற்றும் நேபாள் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் முதல் 2 இடங்களை பிடிக்க அணிகளுக்கு இடையில் கடும் போட்டி இருக்கும். ஏனென்றால், நெதர்லாந்து உலகக் கோப்பையில் விளையாடியுள்ளது. நேபாள், ஆசிய விளையாட்டு போட்டியில் இடம் பெற்று விளையாடியுள்ளது.
இந்தியா விளையாடும் போட்டிகள்:
ஜூன் 5 – இந்தியா – அயர்லாந்து – நியூயார்க்
ஜூன் 9 – இந்தியா – பாகிஸ்தான் – நியூயார்க்
ஜூன் 12 – இந்தியா – அமெரிக்கா – நியூயார்க்
ஜூன் 15 – இந்தியா – கனடா – லாடர்ஹில் (ஃபுளோரிடா)
இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் டே இருக்கிறது.
குரூப் ஏ:
இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா
குரூப் பி:
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்
குரூப் சி:
நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாப்புவா நியூ கினியா,
குரூப் டி:
தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து, நேபாள்
