Asianet News TamilAsianet News Tamil

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக முன்னாள் ஐபிஎல் அதிகாரி ரகுராம் ஐயர் நியமனம்!

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ரகுராம் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Former IPL official Raghuram Iyer appointed as CEO of Indian Olympic Association rsk
Author
First Published Jan 6, 2024, 10:59 AM IST

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகளின் உரிமையாளர்களுடன் தலைமை நிர்வாக அதிகாரியாக ரகுராம் ஐயர் பணியாற்றியிருக்கிறார். இந்த நிலையில் தான், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ரகுராம் ஐயர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நம்பர் 1 அணி ரேங்கை இழந்த இந்தியா – ஐசிசி டெஸ்ட் அணிகளின் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம்!

நேற்று ஜனவரி 5ஆம் தேதி நடந்த நியமனக் குழு நடத்திய தேர்வு செயல்முறையைத் தொடர்ந்து அதன் புதிய தலைமை நிர்வாக அதிகரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ரகுராம் ஐயரின் அனுபவம் மற்றும் அவரது விளையாட்டு மேலாண்மை மற்றும் நிர்வாகத்தில் நிரூபிக்கப்பட்ட சாதனை ஆகியவற்றின் அடிப்படையில் ரகுராம் ஐயரை நியமனக் குழு ஒருமனதாக தேர்ந்தெடுத்ததாக IOA இன் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு – குரூப் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை!

மேலும், தீவிரமாகவும், கவனமாகவும் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களுடன் நடத்தப்பட்ட முழுமையான நேர்காணலுக்கு பிறகு நியமினக் குழு ஒருமனதாக ரகுராம் ஐயரை தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்திருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் உடனான தனது பணியைத் தவிர, ஐயர் ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ரைசிங் சூப்பர்ஜெயன்ட்ஸ் ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் ATK மோகன் பாகனுக்கும், RPSG மேவரிக்ஸ் (டேபிள் டென்னிஸ் அணி) ஆகியோருக்கு தலைமை நிர்வாக அதிகாரியாகவும் அவர் தனது சேவைகளை வழங்கியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின்!

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவரான பி.டி. உஷா, ஐயருக்கு விளையாட்டு நிலப்பரப்பு பற்றிய ஆழமான புரிதல் இருப்பதாகவும், அவரது நியமனம் "உலக அரங்கில் இந்திய விளையாட்டுகளின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான குறிப்பிடத்தக்க படி என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். AIFF - அனைத்திந்திய கால்பந்து சம்மேளன தலைவர் மற்றும் IOAன் இணை செயலாளர் கல்யாண் சௌபே ஆகியோர் ரகுராம் ஐயர் நியமனத்திற்கு முன்பு இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் தலைமை நிர்வாக அதிகாரியின் பணிகளைச் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MS Dhoni File Criminal Case: ஏமாற்றி ரூ.15 கோடி மோசடி – முன்னாள் தொழில் கூட்டாளிகள் மீது தோனி புகார்!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios