Asianet News TamilAsianet News Tamil

நம்பர் 1 அணி ரேங்கை இழந்த இந்தியா – ஐசிசி டெஸ்ட் அணிகளின் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம்!

பாகிஸ்தானுக்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்று கைப்பற்றிய நிலையில், ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது.

Australia Become number one in ICC Mens Test Team Rankings after beat Pakistan in 3 match test series by 3-0 rsk
Author
First Published Jan 6, 2024, 10:03 AM IST

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. இதையடுத்து, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்தது.

டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு – குரூப் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை!

இதே போன்று, 2ஆவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா, பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், 3 முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-0 என்று தொடரை கைப்பற்றியது. எனினும், இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 3ஆம் தேதி தொடங்கியது.

இதில், பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 313 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 299 ரன்கள் எடுத்தது. பின்னர் பாகிஸ்தான் 14 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில், ஜோஷ் ஹசல்வுட் வேகத்தில் பாகிஸ்தான் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின்!

இதன் மூலமாக ஆஸ்திரேலியாவிற்கு 130 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய டேவிட் வார்னர் 57 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, மார்னஸ் லபுஷேன் 62 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களும் எடுக்கவே ஆஸ்திரேலியா 130 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலமாக ஆஸ்திரேலியா 3-0 என்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியதோடு, பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், டெஸ்ட் அணிகளின் ரேங்கிங் பட்டியலில் 2ஆவது இடத்திலிருந்த ஆஸ்திரேலியா 118 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியா 117 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து 115 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 106 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளது.

MS Dhoni File Criminal Case: ஏமாற்றி ரூ.15 கோடி மோசடி – முன்னாள் தொழில் கூட்டாளிகள் மீது தோனி புகார்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios