IND vs AUS: 150ஆவது ஒரு நாள் போட்டியின் மூலமாக உலகக் கோப்பையில் களமிறங்கும் இந்தியா அண்ட் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான உலகக் கோப்பையின் 5ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை 5ஆவது லீக் போட்டி இன்று சென்னையில் நடக்கிறது. சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டிக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மெட்ரோ ரயில் நிறுவனமும், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியமும் இணைந்து இலவச மெட்ரோ ரயில் பயணத்திற்கு புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷான், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா:
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஸ் இங்கிலிஸ், சீன் அபாட், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹசல்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஷ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.
உலகக் கோப்பைக்கு மெட்ரோவில் இலவச பயணம்: ஆனால், இது கண்டிப்பா இருக்கணும்?
அதன்படி, போட்டி முடிந்த பிறகு அரசினர் தோட்டம் Government Estate Metro மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கிரிக்கெட் ரசிகர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு இலவசமாக பயணம் செய்யலாம். ஆனால், அரசினர் தோட்டம் வருவதற்கான டிக்கெட்டை ரசிகர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதே போன்று சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையில் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெங்கு பாதிப்பு காரணமாக சுப்மன் கில் இந்தப் போட்டியில் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் தொடக்க வீரராக களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.
RSA vs SL: உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா படைத்த சாதனைகளின் பட்டியல் – 100, 108, 106 ரன்கள்!
ரோகித் சர்மா தனது 3ஆவது உலகக் கோப்பை போட்டியில் விளையாடுகிறார். முதல் முறையாக ஒரு கேப்டனாக இன்றைய உலகக் கோப்பை போட்டியில் விளையாடுகிறார். உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருடன் 6 சதங்கள் இணைந்துள்ளார். இந்தியா 2 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா இன்றைய போட்டியில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா அணியில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹசல்வுட், டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய சிறப்பு வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர். கடந்த மாதம் நடந்த ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
ஆனால், கடந்த மார்ச் மாதம் நடந்த 3 ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரையில் இரு அணிகளும் 149 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 56 போட்டிகளில் இந்தியாவும், 83 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் 150ஆவது போட்டியில் உலகக் கோப்பையில் விளையாடுகின்றன. இதுவரையில் இரு அணிகளும் மோதிய 12 உலகக் கோப்பை போட்டிகளில் 4ல் இந்தியாவும், 8ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன.
ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு (316 ரன்கள்) எதிரான போட்டியில் இந்தியா (352 ரன்கள்) 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை, எம்.ஏ.சிதம்பரம் மைதானம்:
இதுவரையில் 34 ஒரு நாள் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 17 போட்டிகளிலும், 2ஆவதாக பேட்டிங் ஆடிய அணியானது, 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில், ஆவரேஜ் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 224 ரன்கள். ஆவரேஜ் 2ஆவது இன்னிங்ஸ் ஸ்கோர் 205 ரன்கள். அதிகபட்ச ஸ்கோர் 337/7, குறைந்தபட்ச ஸ்கோர் 69/10. சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 291/2, குறைந்தபட்ச ஸ்கோர் எடுத்து வெற்றி 171/10.
எதிர்பார்ப்பு:
அதிக ரன்கள் எடுக்கும் வீரர் – ரோகித் சர்மா அல்லது விராட் கோலி
அதிக விக்கெட் எடுக்கும் வீரர் – ஜஸ்ப்ரித் பும்ரா அல்லது குல்தீப் யாதவ்
ஆஸ்திரேலியா அணியில் அதிக விக்கெட் கைப்பற்றும் வீரர் – ஆடம் ஜம்பா அல்லது மிட்செல் ஸ்டார்க்
ஆஸ்திரேலியா அணியில் அதிக ரன்கள் குவிக்கும் வீரர் – டேவிட் வார்னர் அல்லது ஸ்டீவ் ஸ்மித்