Asianet News TamilAsianet News Tamil

ஏற்கனவே ஐபிஎல் போச்சு..! இப்ப டி20 உலக கோப்பையையும் இழக்கும் இந்தியா

டி20 உலக கோப்பை இந்தியாவில் நடத்தப்பட வாய்ப்பில்லை என்று ஐசிசி தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
 

india almost lost the hosting right of icc t20 world cup
Author
Chennai, First Published May 4, 2021, 7:10 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் பாதி லீக் சுற்று வெற்றிகரமாக நடந்த நிலையில், கேகேஆர் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், சிஎஸ்கே அணியை சேர்ந்த மூவர், டெல்லி கேபிடள்ஸ் வீரர் அமித் மிஷ்ரா மற்றும் சன்ரைசர்ஸ் வீரர் ரிதிமான் சஹா என அடுத்தடுத்து கொரோனா உறுதியானதால் ஐபிஎல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பயோ பபுளில் பாதுகாப்பாக இருந்தும் கூட வீரர்களுக்கு கொரோனா பரவியது. கொரோனா 2ம் அலை இந்தியாவில் அதிதீவிரமாக பரவிவரும் வேளையில், ஐபிஎல் மட்டுமே மக்களுக்கு சில மணி நேர மகிழ்ச்சியை அளித்துவந்தது. இப்போது அதற்கும் ஆப்பு வைத்துவிட்டது கொரோனா.

india almost lost the hosting right of icc t20 world cup

ஐபிஎல் ரத்தான நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் நடப்பதாக திட்டமிடப்பட்டிருந்த டி20 உலக கோப்பை இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படவுள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவித்துள்ள ஐசிசி, பிசிசிஐயுடனான 90 சதவிகித பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது என்றும் இன்னும் 2 வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios