Asianet News TamilAsianet News Tamil

தென்னாப்பிரிக்காவை தெறிக்கவிட்ட இளம் இந்திய படை.. வெற்றியின் விளிம்பில் இந்தியா ஏ

இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையேயான முதல் அதிகாரப்பூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா ஏ அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 
 

india a team is going to beat south africa a in first unofficial test
Author
Thiruvananthapuram, First Published Sep 12, 2019, 10:06 AM IST

இந்தியா ஏ - தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரை இந்தியா ஏ அணி 4-1 என வென்றது. 

அதைத்தொடர்ந்து 4 நாள் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி திருவனந்தபுரத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா ஏ அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்தியா ஏ அணி, 303 ரன்கள் அடித்தது. இந்த போட்டியில் இந்தியா ஏ அணியின் கேப்டனாக செயல்பட்ட ஷுப்மன் கில், 90 ரன்களை குவித்தார். அவரை தவிர ஜலஜ் சக்ஸேனாவும் அரைசதம் அடித்தார். இந்தியா ஏ அணி, 303 ரன்களை குவிக்க, 139 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க ஏ அணி அதிலும் சொதப்பியது. 

india a team is going to beat south africa a in first unofficial test

இரண்டாவது இன்னிங்ஸிலும் மளமளவென விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க ஏ அணி, 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் சார்பில் நதீம் 3 விக்கெட்டுகளையும் ஷர்துல் தாக்கூர் மற்றும் ஜலஜ் சக்ஸேனா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

தென்னாப்பிரிக்க ஏ அணி, இந்தியா ஏவை விட வெறும் 47 ரன்களே முன்னிலை பெற்றுள்ளது. எனவே கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் இந்தியா ஏ அணி வெறும் 48 ரன்கள் அடித்தால் வெற்றி பெற்றுவிடும். இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்தியா ஏ அணி வெற்றி பெற்றுவிடும். 

Follow Us:
Download App:
  • android
  • ios