தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க ஏ அணி இந்தியா ஏ அணியுடன் ஆடிவருகிறது. 

இதில் 5 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரின் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், மூன்றிலுமே மனீஷ் பாண்டே தலைமையிலான இந்தியா ஏ அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடர் முடிந்ததும் 4 நாள் டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளன. 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. 

இந்த போட்டிகளுக்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு போட்டிகளுக்கும் 2 வெவ்வேறு கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் போட்டிக்கு ஷுப்மன் கில் கேப்டனாக செயல்படவுள்ளார். அந்த போட்டியில் ரித்திமான் சஹா இல்லை. கேஎஸ் பரத் விக்கெட் கீப்பராக ஆடுகிறார். 

இரண்டாவது போட்டியில் சஹா ஆடுவதால், கேஎஸ் பரத் இல்லை. சஹா இரண்டாவது போட்டியில் ஆடுவதால் அவரே கேப்டனாக செயல்படவுள்ளார். இரண்டாவது போட்டிக்கான அணியில் கில்லும் உள்ளார். ஆனால் அவர் கேப்டன் இல்லை. முதல் போட்டியில் சஹா ஆடாததால்தான் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஷிவம் துபே, விஜய் சங்கர் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

முதல் போட்டிக்கான இந்தியா ஏ அணி:

ஷுப்மன் கில்(கேப்டன்), ருத்துராஜ் கெய்க்வாட், அன்மோல்ப்ரீத் சிங், ரிக்கி பூய், அங்கீட் பாவ்னே, கேஎஸ் பரத்(விக்கெட் கீப்பர்), கிருஷ்ணப்பா கௌதம், நதீம், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, விஜய் சங்கர். 

இரண்டாவது போட்டிக்கான இந்தியா ஏ அணி:

ப்ரியன்க் பன்சால், அபிமன்யூ ஈஸ்வரன், ஷுப்மன் கில், அன்மோல்ப்ரீத் சிங், கருண் நாயர், ரிதிமான் சஹா(கேப்டன், விக்கெட் கீப்பர்), கிருஷ்ணப்பா கௌதம், குல்தீப் யாதவ், நதீம், விஜய் சங்கர், ஷிவம் துபே, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ஆவேஷ் கான்.