Asianet News TamilAsianet News Tamil

பிரித்வி ஷா அதிரடி அரைசதம்.. 2வது ஒருநாள் போட்டியில் நியூசி., ஏ அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா ஏ

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என தொடரை வென்றது.
 

india a beat new zealand a in second unofficial odi and win series by 2 0
Author
First Published Sep 25, 2022, 5:11 PM IST

நியூசிலாந்து ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் தொடரை 1-0 என இந்தியா ஏ அணி வென்றது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இதையும் படிங்க - இதெல்லாம் ஒரு மேட்டரா தல? ரசிகர்களை ஆசை காட்டி மோசம் செய்த தோனி! ஃபாலோயர்ஸை பணமாக மாற்றும் தோனி

தொடக்க வீரராக ஆடிய ராச்சின் ரவீந்திரா அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ரவீந்திரா 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஜோ கார்ட்டர் அருமையாக பேட்டிங் ஆடி 72 ரன்களை குவித்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 47 ஓவரில் 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூசிலாந்து ஏ அணி.

220 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்தியா ஏ அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 48 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்தார் பிரித்வி ஷா. மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்களும், கேப்டன் சஞ்சு சாம்சன் 37 ரன்களும் அடிக்க, ரிஷி தவான் (22) - ஷர்துல்தாகூர் (25) ஆகிய இருவரும் இணைந்து போட்டியை முடித்து கொடுத்தனர். 

இதையும் படிங்க - சொல்பேச்சு கேட்காத யஷஸ்வி ஜெய்ஸ்வால்.. களத்தைவிட்டு வெளியே விரட்டிவிட்ட கேப்டன் ரஹானே..! வைரல் வீடியோ

இந்திய வீரர்களின் அதிரடியான பேட்டிங்கால் 34வது ஓவரிலேயே இலக்கை அடித்து இந்தியா ஏ  அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios