Asianet News TamilAsianet News Tamil

சொல்பேச்சு கேட்காத யஷஸ்வி ஜெய்ஸ்வால்.. களத்தைவிட்டு வெளியே விரட்டிவிட்ட கேப்டன் ரஹானே..! வைரல் வீடியோ

துலீப் டிராபி தொடரில் மேற்கு மண்டல அணி கேப்டன் அஜிங்க்யா ரஹானேவின் சொல்பேச்சை கேட்காமல் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்துவந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீது செம கடுப்பான ரஹானே, அவரை களத்திலிருந்து வெளியேற்றினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

angry ajinkya rahane asks yashasvi jaiswal to leave field in duleep trophy match
Author
First Published Sep 25, 2022, 4:09 PM IST

துலீப் டிராபி தொடரில் மேற்கு மண்டலம் மற்றும் தென்மண்டலம் அணிகளுக்கு இடையேயான போட்டி கோவையில் நடந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கு மண்டல அணி 270 ரன்கள் மட்டுமே அடிக்க, தெற்கு மண்டல அணி 327 ரன்களை குவித்தது.

57 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய மேற்கு மண்டல அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக பேட்டிங் ஆடி இரட்டை சதமடித்தார். ஜெய்ஸ்வால் 265 ரன்களை குவித்தார். சர்ஃபராஸ் கான் சதமடித்தார் (127). ஷ்ரேயாஸ் ஐயர் 71 ரன்கள் அடித்தார். அதனால் 2வது இன்னிங்ஸில் வெறும் 4 விக்கெட் இழப்பிற்கு 585 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

இதையும் படிங்க - இதெல்லாம் ஒரு மேட்டரா தல? ரசிகர்களை ஆசை காட்டி மோசம் செய்த தோனி! ஃபாலோயர்ஸை பணமாக மாற்றும் தோனி

2வது இன்னிங்ஸை ஆடிய தென்மண்டல அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, மேற்கு மண்டல அணி 294 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் 2வது இன்னிங்ஸில் தென்மண்டல வீரர் ரவி தேஜா பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது அவரை யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஸ்லெட்ஜிங் செய்ய, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அம்பயர் தலையிட்டு சமாதானம் செய்ய, மேற்குமண்டல கேப்டன் ரஹானே, ஸ்லெட்ஜிங் செய்யக்கூடாது என்று சில நிமிடங்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை கண்டித்துவிட்டு சென்றார். 

இதையும் படிங்க - IND vs AUS: 3வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்.! உத்தேச ஆடும் லெவன்

ஆனால் கேப்டன் பேச்சை கேட்காமல் மீண்டும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரவி தேஜாவை கையை காட்டி ஏதோ பேச, செம கோபமடைந்த ரஹானே, நேரடியாக ஜெஸ்வாலிடம் வந்து அவரை திட்டி களத்தை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

பொதுவாகவே மிகவும் ஒழுக்கமான வீரர் அஜிங்க்யா ரஹானே. அவரது கேப்டன்சியில் ஆடும்போது அணியின் அணுகுமுறைகளும் அப்படித்தான் இருக்கும். தனது அணியை ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த அணியாக வைத்திருப்பது ரஹானேவின் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி ஆடாத டெஸ்ட் போட்டிகளில் ரஹானேவின் கேப்டன்சியில் இந்திய அணியையே அப்படித்தான் வைத்திருப்பார்.

Follow Us:
Download App:
  • android
  • ios