இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. இங்கிலந்து 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
- Home
- Sports
- Sports Cricket
- IND vs ENG 2nd Test Day 4 Live Blog: 2வது இன்னிங்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறல்! இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு!
IND vs ENG 2nd Test Day 4 Live Blog: 2வது இன்னிங்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறல்! இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு!

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிக்கான லைவ் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
IND vs ENG 2nd TestIND vs ENG - 2வது இன்னிங்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறல்! இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு!
IND vs ENG 2nd Testஇந்தியா டிக்ளேர்! இங்கிலாந்து அணிக்கு 608 ரன் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 608 ரன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. சுப்மன் கில் அதிரடி சதம் (162 பந்தில் 161) விளாசினார். கே.எல்.ராகுல் (55), ரிஷப் பண்ட் (65), ஜடேஜா (69 நாட் அவுட்) அரை சதம் அடித்தனர். இந்தியா இன்றைய நாள் முடிவதற்குள் 3 விக்கெட் வீழ்த்தாவிட்டால் இந்த போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளது.
IND vs ENG 2nd Test2வது இன்னிங்சிலும் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தல்!
முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், 2வது இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார். 129 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் சதத்தை எட்டியுள்ளார். இந்திய அணி 2வது இன்னிங்சில் 304/4 என்ற நிலையில் உள்ளது. சுப்மன் கில் (100), ஜடேஜா (25) களத்தில் உள்ளனர். இந்திய அணி 483 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
IND vs ENG 2nd TestShubman Gill - சொத்து மதிப்பிலும் 'இவர்' பிரின்ஸ் தான்! சுப்மன் கில் இத்தனை கோடிகளுக்கு அதிபதியா?
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்து அசத்திய சுப்மன் கில்லின் சொத்து மதிப்பு குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.
IND vs ENG 2nd Testஇந்திய அணி 357 ரன்கள் முன்னிலை!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் (35 பந்தில் 41 ரன்), சுப்மன் கில் (24 ரன்) களத்தில் உள்ளனர். இந்திய அணி 357 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் கூடுதலாக 100 அல்லது 150 ரன்கள் சேர்த்து இந்தியா டிக்ளேர் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs ENG 2nd TestIND vs ENG - 132 ஆண்டு கால சாதனையை முறியடித்த முகமது சிராஜ்! யாரும் கிட்ட கூட வர முடியாது!
இந்திய வீரர் முகமது சிராஜ் 132 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
IND vs ENG 2nd Test4வது நாள் ஆட்டம் தொடக்கம்! 2வது விக்கெட் இழந்த இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் விளையாடும் நிலையில், கருண் நாயர் 26 ரன்னில் கார்ஸ் பந்தில் கேட்ச் ஆனார். இந்திய அணி 100/2 என்ற நிலையில் உள்ளது. கே.எல்.ராகுல் (42 ரன்), சுப்மன் கில் (3) களத்தில் உள்ளனர்.
IND vs ENG 2nd Testபரபரப்பான கட்டத்தில் 2வது டெஸ்ட்! இன்று 4வது நாள் ஆட்டம்!
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தில் உள்ளது. 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்யும் இந்திய அணி நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழந்து 64 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் (28 ரன்), கருண் நாயர் (7) களத்தில் உள்ளனர். இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்துக்கு கடினமான இலக்கு நிர்ணயிக்க இந்திய பேட்ஸ்மேன்கள் இன்று தொடக்கம் முதலே அதிரடியாக ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.