ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. நிதிஷ் குமார் ரெட்டி அறிமுகமாகியுள்ளார். குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஓடிஐ போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது 50 ஓவர் ஒருநாள் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மிட்ச்செல் மார்ஷ் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

நிதிஷ் குமார் ரெட்டி அறிமுகம்

இந்திய அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டருடன் களமிறங்கியுள்ளது. ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் இன்று அறிமுகமாகியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

குல்தீப் யாதவ் நீக்கம்

வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக நிதிஷ் குமார் ரெட்டியும், சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இந்தியாவின் பிளேயிங் லெவனில் உள்ளனர். இதனால், ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டார்.

2015க்கு பிறகு தொடரை வெல்லாத இந்தியா

2015-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை இந்தியாவால் வெல்ல முடியவில்லை. 2015-க்குப் பிறகு நடந்த மூன்று ஒருநாள் தொடர்களிலும் இந்தியா தோல்வியடைந்தது. 2015-ல் தோனி தலைமையிலும், 2018 மற்றும் 2020-ல் கோலி தலைமையிலும் இந்தியா தோற்றது. தோனி தலைமையில் 4-1 எனவும், கோலி தலைமையில் 2-1, 2-1 எனவும் இந்தியா தொடரை இழந்தது.

இரு அணிகளின் பிளேயிங் லெவன்

இந்தியா பிளேயிங் லெவன்: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், ஜோஷ் பிலிப், மாட் ரென்ஷா, கூப்பர் கோனோலி, மிட்செல் ஓவன், மிட்செல் ஸ்டார்க், நாதன் எல்லிஸ், மேத்யூ குனேமன், ஜோஷ் ஹேசில்வுட்.