Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல் சீசனில் மவுசை கூட்டிய பந்து வீச்சாளர்கள் யார் யார் தெரியுமா?

கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த ஷிவம் மாவி வரும் 2023 ஆம் ஆண்டு நடக்கும் 16ஆவது ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

Including Shivam Mavi These bowlers are received huge amount in IPL mini auction
Author
First Published Dec 31, 2022, 9:54 PM IST

ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் கொச்சியில் கடந்த 23ம் தேதி நடந்தது. ஆல்ரவுண்டர்களுக்கு என்று அதிக மவுசு இருந்தது. இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனை அதிகபட்சமாக ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இங்கிலாந்து அணியின் மற்றொரு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனை ரூ.17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதே போன்று நிக்கோலஸ் பூரன், மாயங்க் அகர்வால், ஹேரி ப்ரூக் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

IPL 2023: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

பேட்டிங், சிறந்த ஆல் ரவுண்டர்களுக்கு என்று ஒவ்வொரு அணியும் அதிக முதலீடு செய்ததோ, அதே போன்று பந்து வீச்சாளர்களுக்கும் அதிக தொகையை செலவு செய்துள்ளது. அந்த வகையில், 3ஆவது இடத்தில் இருப்பது அயர்லாந்து அணியின் பந்து வீச்சாளர் ஜோஷுவா லிட்டில். இவரது ஆரம்ப விலை என்னவோ ரூ.50 லட்சம் தான். ஆனால், கடந்த ஐபிஎல் சீசனில் அறிமுகமான ஹர்திக் பாண்டியாவின் குஜராஜ் டைட்டன்ஸ் அணி ஜோஷுவாவை ரூ.4.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஒரு அயர்லாந்து வீரர் ஐபிஎல் சீசனில் இடம் பெறுவது இதுவே முதல் முறை.

ஆண்டுக்கு ரூ.1770 கோடி சம்பளம்.. ரொனால்டோவை ஒப்பந்தம் செய்த சௌதி அரேபிய கிளப் அணி

கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அதிகளவில் விக்கெட் எடுக்கும் வீரர் என்ற பெருமையை ஜோஷுவா பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ஜோஷுவா 3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஒட்டுமொத்தமாக ஜோஷுவா லிட்டில் 53 டி20 போட்டிகளில் 62 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அவர் மீது நம்பிக்கை வைத்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை ரூ.4.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2. முகேஷ் குமார்:

உள்ளூர் கிரிக்கெட்டில் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் முகேஷ் குமார். இவரை ஏலத்தில் எடுப்பதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் கடும் போட்டி நிலவியது. இவரது ஆரம்ப விலை என்னவோ ரூ.20 லட்சம் தான். கடைசியாக டெல்லி கேபிடள்ஸ் ரூ.5.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. சையது முஸ்டாக் அலி டிராபி தொடரில் 6 போட்டிகளில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். இதே போன்று விஜய் ஹசாரே டிராபியில் 6 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.

ரிஷப் பண்ட் மூளை & முதுகுத்தண்டு MRI ஸ்கேன் ரிப்போர்ட்..! எந்த பிரச்னையும் இல்லை.. ரசிகர்கள் நிம்மதி

3. ஷிவம் மாவி:

கடந்த ஐபிஎல் சீசனில் ஷிவம் மாவியின் மோசமான பார்ம் காரணமாக கொல்கத்தா அணி அவரை விடுவித்தது. இவரது ஆரம்ப விலை ரூ.40 லட்சம் தான். அப்படியிருந்தும், மாவியை ஏலத்தில் எடுப்பதற்கு கொல்கத்தா அணி, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இறுதியாக குஜராத் அணி ரூ.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

கடந்த ஐபிஎல் சீசனில் 6 போட்டிகளில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். சையது முஸ்டாக் அலி டிராபியில் உத்தரப்பிரதேச அணியில் இடம் பெற்றிருந்த மாவி 7 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios