ஆண்டுக்கு ரூ.1770 கோடி சம்பளம்.. ரொனால்டோவை ஒப்பந்தம் செய்த சௌதி அரேபிய கிளப் அணி
ஆண்டுக்கு ரூ.1770 கோடி சம்பளமாக கொடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துள்ளது சௌதி அரேபியா கிளப் அணியான அல் நஸர் அணி.
சமகாலத்தின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு சமீப காலத்தில் அடி மேல் அடியாக விழுந்து வந்தது. போர்ச்சுகல் அணிக்காக 195 போட்டிகளில் ஆடி 118 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோ, தனது அணிக்கு ஃபிஃபா உலக கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்ற பெரும் கனவுடன் உலக கோப்பைக்கு சென்றார்.
ஆனால் கத்தாரில் நடந்த ஃபிஃபா உலக கோப்பையில் மொராக்கோவிற்கு எதிரான காலிறுதி போட்டியில் 1-0 என்ற கோல்கணக்கில் தோற்று போர்ச்சுகல் அணி தொடரைவிட்டு வெளியேறியது. காலிறுதிக்கு முந்தைய சுற்று மற்றும் காலிறுதி போட்டி ஆகிய 2 நாக் அவுட் போட்டிகளிலும் ஆட்டத்தின் முதல் பாதியில் ரொனால்டோ களமிறக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காலிறுதியில் மொராக்கோவிடம் தோற்று தனது வாழ்நாள் கனவு தகர்ந்த சோகத்தில் மைதானத்திலேயே உடைந்து அழுதார் ரொனால்டோ.
ரிஷப் பண்ட் மூளை & முதுகுத்தண்டு MRI ஸ்கேன் ரிப்போர்ட்..! எந்த பிரச்னையும் இல்லை.. ரசிகர்கள் நிம்மதி
மேலும், ஐரோப்பிய கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ஆடிவந்த ரொனால்டோவிற்கும் அந்த அணி மேலாளர் நிர்வாகத்திற்கும் இடையே மோதல் மூள, அந்த கிளப்பிலிருந்து நீக்கப்பட்டார் ரொனால்டோ. ரொனால்டோவை மான்செஸ்டர் யுனைடெட் கிளப் நீக்கியது, அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.
இதையடுத்து 37 வயது ரொனால்டோவை வாங்க பல கிளப் அணிகள் போட்டி போட்ட நிலையில், ஆண்டுக்கு ரூ.1770 கோடி என்ற பெரிய தொகைக்கு சௌதி அரேபியா கிளப் அணியான அல் நஸர் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது.
கவனமாக கார் ஓட்டுடா தம்பி.. 3 ஆண்டுக்கு முன்பே ரிஷப் பண்ட்டை எச்சரித்த ஷிகர் தவான்..! வைரல் வீடியோ
ரொனால்டோவை எடுத்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள மான்செஸ்டர் யுனைடெட் கிளப், வரலாறு உருவாகிறது. ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ததன் மூலம் எங்கள் கிளப் மட்டுமல்லாது, இந்த லீக்கிற்கே பெரிய வெற்றி கிடைத்துள்ளது. எங்கள் நாடு மற்றும் எதிர்கால சந்ததிக்கும் இது உத்வேகமாக அமையும். வெல்கம் ரொனால்டோ என டுவீட் செய்துள்ளது.
ரொனால்டோவும் ஆசிய கிளப் அணிக்கு ஆடுவது குறித்தும், அல் நஸர் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.